2007ஆம் ஆண்டு முதல் பெங்கால் அணிக்காக இதுவரை 122 பர்ஸ்ட் கிளாஸ் மற்றும் 102 லிஸ்ட் ஏ போட்டிகளில் விருத்திமான் சஹா விளையாடி இருக்கிறார்.
கடந்த ஆண்டு பெங்கால் கிரிக்கெட்டில் சஹாவின் அர்ப்பணிப்பைக் கேள்விக்குட்படுத்தும் வகையில் சி ஏ பி அதிகாரி ஒருவர் தெரிவித்த கருத்துகளால் சஹா குழப்பமடைந்தார். பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் அவிஷேக் டால்மியா மற்றும் தலைமைப் பயிற்சியாளர் அருண் லால் மூலம் சிறந்த முறையில் முயற்சி செய்தும் சஹாவின் மனதை மாற்ற முடியவில்லை.
சஹா சம்மதிக்காத காரணம் இதுதான்
கடந்த 15 வருடங்களாக பெங்களூர் அணிக்கு விளையாடி இருக்கிறேன் இருப்பினும் இந்த முடிவை நான் இறுகிய மனதுடன் தான் எடுக்கிறேன். ஒரு வீரராக ஒரு சில விஷயங்களை கேள்விப்படும் பொழுது ஒரு சில கமெண்ட்டுகள் என் மீது வரும் பொழுது நான் ஏமாற்றமடைந்துள்ளேன்.என் நேர்மை பற்றி என்னிடம் கேள்வி எழுப்புவது என்னை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கியுள்ளது. கடந்த வருடங்களில் இது போன்ற நிலைக்கு நான் ஆளாகவில்லை, ஆனால் இப்பொழுது ஆளாகியுள்ளேன்.
பெங்கால் அணிக்காக இனி விளையாட மாட்டேன் என்கிற முடிவை எடுத்த பின்னர் பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் அவிஷேக் டால்மியா என்னை சந்தித்து பேச வேண்டும் என்று கூறினார். அவரிடம் பேசி பின்னர் ஒருசில சம்பிரதாயங்களை முடித்த பின்னர் இது பற்றிய முடிவு தெரியும் என்றும் கூறியுள்ளார்.
பெங்கால் அணிக்கு இனி விளையாட போவதில்லை என்றால் அடுத்த சீசன் முதல் புதிய அணைக்கு அவர் விளையாடுவாரா என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. அது சம்பந்தமாக பேசிய அவர் நிறைய பேரிடம் இது சம்பந்தமாக பேசி இருக்கிறேன் இருப்பினும் நான் எந்தவித முடிவும் எடுக்கவில்லை. அடுத்த சீசன் தொடங்கும் நாட்கள் இருக்கின்றது எனவே பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு என்னுடைய முழு பங்களிப்பையும் வழங்கினேன். அணி கோப்பையை வென்றது மிகவும் சந்தோஷம். அடுத்து என்ன நடக்கப்போகிறது அதற்காக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நான் பெரிதும் யோசிக்க மாட்டேன் என்னுடைய கவனம் மற்றும் நோக்கம் எனக்கு கிடைத்த பணியை சரியாக செய்வது மட்டுமே என்றும் கூறியுள்ளார்.