உலக கோப்பைக்கு இந்த டீம செலக்ட் பண்ணதுக்கு காரணம் பாகிஸ்தான் மேட்ச்தான் – காரணத்தை விளக்கிய ரோகித் சர்மா!

0
976
Rohit

நேற்று 15 பேர் கொண்ட அணியை இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு அறிவித்திருக்கிறது.

இந்த அணியில் ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால், செப்டம்பர் 26 ஆம் தேதி வரையில் செய்து கொள்ளலாம் என்று ஐசிசி தெரிவித்திருக்கிறது. ஆனால் அறிவிக்கப்பட்ட உலகக் கோப்பை இந்திய அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்பட வாய்ப்பு இருக்காது என்பதாகத்தான் தெரிகிறது.

- Advertisement -

இந்த முறை ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பைக்கு இந்திய அணி நிர்வாகம் லெக் ஸ்பின்னர் மற்றும் ஆப் ஸ்பின்னர் என இரு வகை பந்து வீச்சையும் விரும்பவில்லை. இதன் காரணமாக சாகல் மற்றும் அஸ்வின் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை.

இன்னொரு பக்கத்தில் பேட்டிங் அல்லது பந்துவீச்சு ஏதாவது ஒரு துறையில் வலுவாக இருக்கின்ற ஆல்ரவுண்டரை மட்டுமே எடுக்க வேண்டும் என்கின்ற விதிமுறையை மீறி, இரண்டிலும் ஏதாவது குறைந்தபட்ச பங்களிப்பை செய்ய முடிகின்ற சர்துல் தாக்கூரை இந்திய தேர்வு குழு தேர்ந்தெடுத்திருக்கிறது.

இதன் காரணமாக உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணி குறித்து சமூக வலைதளங்களில் பரவலான விமர்சனங்களை காண முடிகிறது. அக்சர் படேல் இடத்தில் ஒரு ஆப் ஸ்பின்னர், சர்துல் தாக்கூர் இடத்தில் ஒரு முழுமையான ஆல் ரவுண்டர் தேவை என்று வலியுறுத்தப்படுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் இது குறித்து கூறியுள்ள இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா “கடந்த சில ஆண்டுகளாக எங்கள் அணியில் பேட்டிங் ஆழம் இல்லாமல் இருந்து வருகிறது. இதை நாங்கள் இப்பொழுது உருவாக்கி ஆக வேண்டும். பேட்டிங் ஆழம் என்று வரும் பொழுது எட்டு மற்றும் ஒன்பதாவது இடம் மிகவும் முக்கியமானது.

இங்கே ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், நம்முடைய பேட்டிங் பின் வரிசை மொத்தமாக தோல்வி அடைந்ததை பார்த்தோம். நம்முடைய இறுதிக்கட்ட வீரர்களும் பேட்டிங்கில் பங்களிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

அந்த ஆட்டத்தில் இன்னும் பத்து பதினைந்து ரன்கள் சேர்த்து எடுத்து இருந்தால் அது வேறு மாதிரி இருந்திருக்கும். ஒரு ஒருநாள் போட்டியில் வெற்றிக்கும் தோல்விக்குமான வித்தியாசம் அந்த ரன்கள்தான். நாங்கள் இதற்கான ஒரு அணியை உருவாக்க வேண்டும் என்று பேசி வாங்கி இருக்கிறோம். நாங்கள் வீரர்களிடமும் இதை தெரிவித்து இருக்கிறோம்!” என்று கூறியிருக்கிறார்!