உலக கோப்பைக்கு இந்த சீனியர் பேட்ஸ்மேன் வேண்டாம்.. டிராவிட் திட்டத்துல இருக்கனும் – சவுரவ் கங்குலி வெளிப்படையான பேச்சு!

0
2410
Ganguly

இந்தியாவில் முதன்முறையாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதி துவங்கி நவம்பர் 19ஆம் தேதி வரையில் நடக்க இருப்பது நாம் அறிந்ததே!

இந்த உலகக் கோப்பை தொடருக்கு உலகக் கோப்பையை நடத்தும் இந்தியாவைத் தவிர ஏனைய மற்ற ஒன்பது அணிகளும், எந்த வீரர்களைக் கொண்டு விளையாடப் போகிறோம் என்பதில் மிகத் தெளிவாகவே இருக்கின்றன.

- Advertisement -

முக்கிய வீரர்களின் எதிர்பாராத காயம் மற்றும் அவர்களின் மறுவாழ்வு ஒருநாள் உலகக் கோப்பைக்கு இந்திய அணியை இறுதி செய்வதில் இந்திய அணி நிர்வாகத்திற்கு சிக்கலை தற்பொழுது உண்டாக்கி வருகிறது.

ஆரம்பத்தில் நான்காவது இடத்திற்கான பேட்ஸ்மேன் யார்? அணிக்கு இரண்டாவது விக்கெட் கீப்பர் யார்? என்று இரண்டு பிரச்சனைகள் மட்டுமே இருப்பதாக மேலோட்டமாகத் தெரிந்தது. ஆனால் தற்பொழுது துவக்க ஆட்டக்காரரே உறுதியில்லாமல் இருப்பதாகத்தான் தெரிகிறது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி கூறும் பொழுது “தற்போது நமது இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். ஆனால் அவர் விபத்தில் சிக்கி மறுவாழ்வில் இருப்பதால், இஷான் கிஷான் மற்றும் கேஎல் ராகுல் இருவரைதான் பார்க்க வேண்டும்.

- Advertisement -

கேப்டன் ரோஹித் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவரது மனதிலும் இவர்கள்தான் இருப்பார்கள். எனக்கு இஷான் கிஷானை பிடிக்கும். ஏனென்றால் அவர் துவக்க ஆட்டக்காரராக ஆட்டத்தை துவங்க முடியும். டிராவிட் அவரை தனது திட்டங்களில் வைத்திருப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

ஒருபக்கத்தில் அனுபவம் உள்ள வீரர்களையும் மறுபக்கத்தில் திலக் வர்மா, இசான் கிஷான் மற்றும் ஜெய்ஸ்வால் மாதிரி பயமில்லாமல் விளையாடக்கூடிய வீரர்களையும் கொண்டு அணி உருவாக்கப்பட வேண்டும். கேப்டன் ரோகித் மற்றும் பயிற்சியாளர் டிராவிட் மற்றும் தேர்வாளர்களுக்கு நிறைய தேர்வுகள் இருக்கிறது. அவர்கள் அதிலிருந்து ஒரு சிறந்த விளையாடும் லெவனை தேர்வு செய்ய வேண்டும்” என்று கூறி இருக்கிறார்!