தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வரும் ராகுல் டிராவிட் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. இதற்கு அடுத்து புதிய பயிற்சியாளரை இந்திய கிரிக்கெட் வாரியம் தேடி வருகிறது. தற்போது இதற்கு கம்பீர் தேர்வு செய்யப்படலாம் என்கின்ற செய்தி குறித்து ஆகாஷ் சோப்ரா பரபரப்பான கருத்து ஒன்றை கூறியிருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் கம்பீர் லக்னோ அணியின் மென்டர் பொறுப்பில் இருந்து நகர்ந்து, கொல்கத்தா அணியின் மென்டர் பொறுப்புக்கு வந்திருக்கிறார். மேலும் கொல்கத்தா அணி நடப்பு ஐபிஎல் சீசனில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது.
இதற்கு முன்னதாக கம்பீர் லக்னோ அணிக்கு மென்டராக இருந்த இரண்டு சீசன்களிலும் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சிளர் பதவிக்கு சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங், டெல்லி கேப்பிட்டல்ஸ் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மற்றும் கவுதம் கம்பீர் மூவரும் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் விரும்பப்படுகிறார்கள் என்று தெரிகிறது. மேலும் இதில் கம்பீருக்கு முன்னுரிமை இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் மோசமான தேர்வு கிடையாது. அவர் அதற்கு மிகவும் தகுதியானவர். ஒரு அணியை எப்படி உருவாக்குவது மற்றும் நிர்வாகிப்பது என்பது குறித்து அவருக்கு நன்றாக தெரியும். அவர் இதற்கான போட்டியில் வரும் பொழுது நான் அதை ஆதரிக்கிறேன். இந்திய அணியில் அதற்கான போட்டியும் இருக்காது.
இதையும் படிங்க : ஆர்சிபி ரசிகர்கள் தான் சிறந்தவங்கனு சொன்னாங்க.. கோலிகிட்ட நான் நேர்ல பார்த்தேன் – வில் ஜேக்ஸ் பேட்டி
அணியில் ஒரு மாற்றம் வரும் பொழுது புதிய கேப்டன் வருவார். இந்த இடத்தில் நான் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பேன். ஏனென்றால் கம்பீரின் வேலை பாணி ஒரு கண்டிப்பான அப்பாவை போன்றது. எனவே சீனியர் வீரர்கள் அதிகம் அணியில் இருந்தால் இது சரி வராது. எனவே குழந்தைகள் கவனமாக இருக்க வேண்டும். மேலும் அணியில் நிறைய சீனியர் வீரர்கள் இருக்கும்பொழுது, தங்களை திணிக்க முற்படாத ஒரு பெரிய சகோதரர்கள் போல இருக்கக்கூடிய பயிற்சியாளர்தான் தேவைப்படுகிறார்” என்று கூறியிருக்கிறார்.






