“எதிர்காலத்தில் இந்த வீரர்தான் இந்தியாவுக்காக அதிக ரன் எடுப்பார்.. ஆனா கொஞ்சம்..!” – ஏபி.டிவில்லியர்ஸ் கருத்து!

0
1543
Devilliers

இந்திய அணி தற்பொழுது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக உள்நாட்டில் விளையாடி வருகிறது. நான்கு போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் தொடரையும் கைப்பற்றி இருக்கிறது.

இதற்கு அடுத்து இந்திய அணி மூன்று டி20, மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட மூன்று தொடர்களில் விளையாட தென் ஆப்பிரிக்க நாட்டிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்கிறது.

- Advertisement -

இந்த சுற்றுப்பயணத்தில் முதல் தொடராக டி20 தொடர் நடைபெறுகிறது. இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி டிசம்பர் 10ஆம் தேதி ஆரம்பிக்கிறது.

இந்த மூன்று தொடர்களுக்கும் மூன்று விதமான இந்திய அணியை இந்திய தேர்வுக்குழு நேற்று முன்தினம் அறிவித்தது. நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சாய் சுதர்சன், ரிங்கு சிங், ரஜத் பட்டிதார் ஒருநாள் தொடர் இந்திய அணியில் இடம் பெற்று இருக்கிறார்கள்.

ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் விளையாடிய நிறைய வீரர்களுக்கு தென் ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக இளம் வீரர் சுப்மன் கில்லுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது வாய்ப்பு பெற்று இருக்கும் இளம் வீரர்கள் தென் ஆப்பிரிக்கா போன்ற ஒரு நாட்டில் எந்த மாதிரி ஆட்டத்தை மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை பார்க்க இந்திய கிரிக்கெட் வாரியம் மிகவும் ஆர்வமாக இருக்கிறது.

இந்த நிலையில் இளம் வீரர்கள் குறித்து பேசி உள்ள ஏபி.டிவில்லியர்ஸ் கூறும் பொழுது ” நான் கில் பேட்டிங் செய்வதை பார்க்க விரும்புகிறேன். அவர் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும். ஆனாலும் அவருக்கு ஒரு பேட்ஸ்மேன் ஆக என்ன தேவையோ அது எல்லாம் இருக்கிறது. மேலும் வெற்றி பெறுவதற்கான எல்லாவற்றையும் அவர் காட்டியும் இருக்கிறார்.

அவர் தனது திறன்களை சமநிலைப்படுத்தி, ஆட்டத்தின் போக்கை உணர்ந்து, மேலும் அவர் தன்னுடைய சொந்த ஆட்டத்தையும் நன்றாகப் புரிந்திருக்கிறார். மேலும் அவர் இந்தியாவுக்காக எதிர்காலத்தில் நிறைய ரன்கள் எடுப்பார் என்று நான் நினைக்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!