“இந்திய அணியில் இந்த வீரர் உப்பு மாதிரி.. அவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்” – ஆப்கான் குர்பாஸ் நம்பிக்கை

0
327
Gurbaz

இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுமையாக வென்று முடித்திருக்கிறது. இதற்கடுத்து ஏறக்குறைய ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்துக்கு எதிராக ஒன்றரை மாதங்களுக்கு மேல் விளையாடுகிறது.

ஆப்கானிஸ்தான் அணி முதல்முறையாக இந்திய அணிக்கு எதிராக இரு நாடுகளுக்கு இடையேயான வெள்ளைப் பந்து தொடர் ஒன்றை விளையாடி முடித்திருக்கிறது.

- Advertisement -

ஆசியாவில் இருந்து வந்த கிரிக்கெட் அணியான ஆப்கானிஸ்தான் படிப்படியாக முன்னேறி இன்று வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் எந்த அணிக்கும் சவால் விடும் உயரத்திற்கு வளர்ந்திருக்கிறது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை பெரிய கிரிக்கெட் நாடுகள் கொடுக்கும் பொழுது, அவர்களுக்கு நிறைய அனுபவங்கள் கிடைக்கும். அதன் மூலம் அவர்களது கிரிக்கெட் வளர்ச்சி இன்னும் அதிகரிக்கும்.

மிகக் குறிப்பாக ஆசியாவில் இந்தியாவுக்கு எதிரான நிறைய தொடர்களை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதன் மூலம் அனுபவத்தோடு சேர்த்து அவர்களது கிரிக்கெட்டுக்கு கொஞ்சம் பணமும் கிடைக்கும். மேலும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் படிப்படியாக ஐபிஎல் தொடருக்குள் அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த வகையில் ஆப்கான் வீரரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளவருமான விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் குர்பாஸ் பேசும்போது ” ரிங்கு சிங் கொல்கத்தா அணியில் உப்பு மாதிரி.அவர் அனைவரையும் மகிழ்விக்கும் வகையான நபர். அவர் வேடிக்கையான அதே சமயத்தில் சிறந்தவர். நான் அவரை நேசிக்கிறேன், எங்களுக்குள் ஐபிஎல் தொடர் தாண்டி நட்பு இருக்கிறது.

நிச்சயமாக அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் ஃபினிஷர். அவர் விளையாட வரும் பொழுது பந்தை அடிக்க மட்டும் பார்ப்பது கிடையாது. ஒவ்வொரு பந்துக்கும் எப்படி விளையாட வேண்டுமோ அப்படி விளையாடக் கூடியவர். அவர் புத்திசாலித்தனமான கிரிக்கெட்டர், நிலைமைகளை சீக்கிரத்தில் சரி செய்து கொள்ளக் கூடியவர். இந்தியாவின் அடுத்த ஃபினிஷர் ஆக அவர் வர முடியும்.

அவருக்கு வயது இருக்கிறது. சமீபத்தில் அவர் எல்லாருக்கும் எதிராக விளையாடும் ஆட்டங்கள் நம்ப முடியாத வகையில் உள்ளது. அவர் நான் இங்கே இருக்கிறேன் என்று காட்டி இருக்கிறார். எனவே தோனி மற்றும் யுவராஜ் சிங் இந்திய அணிக்கு பினிஷிங் செய்த மரபை ரிங்கு சிங் தொடர முடியும்” என்று கூறியிருக்கிறார்.