“இந்த லெஜெண்ட் இந்திய வீரரால் என் பவுலிங்க ஆட முடியல” – முத்தையா முரளிதரன் பேட்டி.!

0
927

இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்தவர். இதுவரை எத்தனையோ சிறந்த பந்துவீச்சாளர்கள் இருந்தும் இவரது 800 விக்கெட்டுகள் என்ற மைல் கல்லை யாராலும் நெருங்க முடியவில்லை.

இன்னும் பல வருடங்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முத்தையா முரளிதரன் தான் முதலிடத்தில் இருப்பார். இலங்கை அணிக்காக 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் இவர் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். மேலும் 350 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 534 விக்கெட்டுகளும் 12 t20 சர்வதேச போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையோடு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் .

- Advertisement -

தற்போது இவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆலோசகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்த முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு 800 என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்படுகிறது. இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட முத்தையா முரளிதரன் தன்னுடைய பந்துவீச்சை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆன ராகுல் டிராவிட் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்த போதும் அவரால் பிக் செய்ய சிரமப்பட்டு இருக்கிறார் என தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அந்த நிகழ்ச்சியில் பேசிய முத்தையா முரளிதரன் ” இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களான சச்சின் டெண்டுல்கர் விரேந்தர் சேவாக் மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோர் என்னுடைய பந்துவீச்சை நன்றாக கணித்து விளையாடக்கூடிய வீரர்கள். நான் பந்து வீசும் திசையை நன்கு கணித்து விளையாடியவர்கள் இவர்கள் என்று தெரிவித்தார். மேலும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் என்னுடைய பந்துகளில் ரன்கள் எடுத்திருந்தாலும் அவரால் என்னுடைய பந்துவீச்சை ஒருபோதும் கணிக்க முடிந்ததில்லை மேலும் அவர் என்னுடைய தூஸ்ராவை எப்போதும் கணிப்பதற்கு கஷ்டப்பட்டு இருக்கிறார். அந்த விதத்தில் சச்சின் சேவாக் மற்றும் கம்பீர ஆகியோர் என்னுடைய பந்துகளை சரியாக பிக் செய்வார்கள் என தெரிவித்துள்ளார்

மேலும் இது குறித்து தொடர்ந்து பேசிய முரளிதரன் ” உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான பிரைன் லாராவும் எனக்கு எதிராக சிறப்பாக ஆடி இருந்தாலும் அவரால் என்னுடைய பந்துவீச்சை கணிக்க முடிந்ததில்லை. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் என்னுடைய பந்தை சரியாக கனித்து விளையாடியவர்கள் சச்சின் சேவாக் மற்றும் கம்பீர் என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சச்சின் டெண்டுல்கர் பேசிய போது முத்தையா முரளிதரன் செய்திருக்கும் சாதனைகள் மகத்தானவை. எனக்கு அவரை 1992-93 வருடங்களில் இருந்தே தெரியும். முரளிதரன் என்னுடைய சிறந்த நண்பர்களில் ஒருவர். அவர் தூஸ்ரா பந்தவீசுவதற்காக 18 மாதங்களுக்கு மேல் வலை பயிற்சி மட்டுமே எடுத்துக் கொண்டார் இதை ஏன் சொல்கிறேன் என்றால் அவருடைய கடின உழைப்பு எப்படிப்பட்டது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் சொல்கிறேன் என சச்சின் டெண்டுல்கருத்தறிவித்திருக்கிறார்.

இதற்கு பதில் அளித்து பேசிய முத்தையா முரளிதரன் 15 வயதில் முதல் தர கிரிக்கெட் போட்டியில் பங்கு கொண்டு 17 வயதில் டெஸ்ட் போட்டியில் முதல் சதம் எடுத்து இன்று சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் எட்டிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சச்சின் டெண்டுல்கர் தான் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர். இனி யாரும் சச்சின் போன்ற ஒரு பேட்ஸ்மேன் பிறக்கப் போவதில்லை. எல்லா காலங்களுக்கும் என்று என்னால் சொல்ல முடியாவிட்டாலும் என்னுடைய வாழ்நாள் முடியும் வரை இன்னொரு சச்சின் டெண்டுல்கர் பிறக்கப் போவதில்லை என தெரிவித்திருக்கிறார் .