“உலக கோப்பை இழந்ததே இதனாலதான்.. இந்தியாவுல இத ஒண்ணுமே பண்ண முடியாது!” – பிரசித் கிருஷ்ணா விளக்கமான பேச்சு!

0
10105
Prashid

இந்திய அணி சமீபத்தில் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தோல்வி அடைந்து, உலகக் கோப்பையை இழந்தது.

வெளிப்படையாக நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தான் மிகச்சிறந்த அணியாக இருந்தது. கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு முற்றிலும் தகுதியான அணி.

- Advertisement -

ஆனாலும் கூட இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு மிக முக்கிய காரணம், ஆட்டத்தின் முதல் பகுதியில் ஆடுகளம் பேட்டிங் செய்ய கடினமாக இருந்தது. அதே சமயத்தில் இரண்டாவது பகுதியில் பந்து வீசும் பொழுது பனிப்பொழிவினால் பந்து வீச கடினமாக இருந்தது.

இந்தியாவில் பனிப்பொழிவு என்பது தடுக்க முடியாதது. மேலும் ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் பனிப்பொழிவு வரும் என்றால், ஆட்டத்தின் முதல் பகுதியில் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு கடினமாக இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் இரண்டாவது பேட்டிங் செய்யக்கூடிய அணிதான் எப்பொழுதும் வெல்லும். உலகக் கோப்பையில் இந்திய அணையின் தோல்விக்கு முக்கிய காரணம் ஆடுகளமும் இயற்கையும்தான். நேற்றைய போட்டியிலும் இதே நிலைதான் இருந்தது.

இதுகுறித்து பேசி உள்ள பிரசித் கிருஷ்ணா கூறும் பொழுது “நாங்கள் பந்தை தண்ணீரில் போட்டு ஈரமாக்கி விளையாட முயற்சி செய்கிறோம். ஆனாலும் கூட போட்டி என்பது வித்தியாசமானது. நீங்கள் போட்டிக் கொண்டிருக்கும் பொழுது உங்களுக்கு வியர்க்கும். மேலும் உங்களுடைய டவல் ஈரமாக இருக்கும்.

- Advertisement -

நான் மூன்றாவது மற்றும் நான்காவது ஓவரை முடித்த பொழுது என்னுடைய டவல் ஈரமாக இருந்தது. அந்த நேரத்தில் உங்களால் பெரிதாக எதுவும் செய்ய முடியாது. நீங்கள் செய்ய வேண்டியது பயிற்சியை நிறுத்தாமல் இருக்க வேண்டும். பனி வரும் பொழுது இது வித்தியாசமான விளையாட்டாக மாறிவிடும்.

நாங்கள் முதல் போட்டியில் விளையாடிய விசாகப்பட்டினத்தில் கூட பனியை எதிர்பார்த்தோம். அங்கு எங்களுக்கு அதிர்ஷ்டவசமாக அப்படியான சூழ்நிலை அமையவில்லை. ஆனால் இங்கு அப்படி கிடையாது. ஆறாவது மற்றும் எட்டாவது ஓவரிலேயே முகேஷ் குமார் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது என்று கூறினார்.

இந்தியாவில் விளையாடும் பொழுது விளையாட்டின் ஒரு பகுதியாக பனிப்பொழிவு இருக்கிறது. ஒரு பந்துவீச்சு பிரிவாக நாம் இதை சமாளிக்க கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் இது மிகவும் கடினமானது. இதற்கு தகுந்த மாதிரி நாம் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!