“இந்தியாவின் ஆட்டம் கைமீறி சென்றது இவரால் தான்” – தவான் பேட்டி!

0
13263

முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த இடத்தில் தான் இந்தியா தவறவிட்டது என்று பேட்டியளித்துள்ளார் ஷிகர் தவான்.

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று பவுலிங் செய்தது நியூசி., அணி.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் அடித்தது. கேப்டன் ஷிகர் தவான் 72 ரன்கள் மற்றும் சுப்மன் கில் 50 ரன்கள் என இரண்டு துவக்க வீரர்களும் அரைசதம் அடித்து வலுவான துவக்கத்தை அமைத்து கொடுத்தனர்.

ஷ்ரேயாஸ் அபாரமாக ஆடி 80 ரன்கள் அடித்து கொடுக்க, கேமியோ விளையாடிய வாஷிங்டன் சுந்தர் 3 பவுண்டரி, 3 சிக்ஸர் அடித்து, 37 (16) ரன்கள் அடித்தார்.

307 ரன்கள் இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு பின் ஆலன்(22), டிவான் கான்வே(24) ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர். டெரல் மிச்சல் 11 ரன்களுக்கு அவுட்டாகினார்.

- Advertisement -

வில்லியம்சன் மற்றும் டாம் லேத்தம் இருவரும் ஜோடி சேர்ந்து சரிவிலிருந்து மீட்டனர். வில்லியம்சன் அரைசதம் கடந்து நிதானமாக விளையாடினார். டாம் லேத்தம் அரைசதம் அடித்தபின், அடுத்த கியருக்கு ஆட்டத்தை மாற்றி 76 பந்துகளில் சதம் அடித்தார்.

நான்காவது விக்கெட்டுக்கு வில்லியம்சன் மற்றும் டாம் லேத்தம் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து 221 ரன்கள் சேர்த்தனர். இதுதான் நியூசிலாந்து வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது. லேத்தம் 104 பந்துகளில் 145 ரன்களும் வில்லியம்சன் 94 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். 47.1 ஓவர்களில் இலக்கை எட்டிய நியூசிலாந்து 309/3 எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

போட்டி முடிந்த பிறகு பெட்டியளித்த தவான் கூறுகையில்:

இந்திய அணி இவ்வளவு பெரிய டோட்டலை வைத்தது சற்று மகிழ்ச்சியாக இருந்தது. முதல் 10-15 ஓவர்களில் பந்து எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. அதன் பிறகு சரியான லென்த்தை வீச முடியவில்லை. இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு லேத்தம் மிகச் சிறப்பாக விளையாடினார். நாற்பதாவது ஓவரில் தான் ஆட்டம் அவர்களது பக்கம் திரும்பியது. அதன் பிறகு மொத்தமாக வெற்றியை எடுத்துக் கொண்டார்கள்.

இந்த மைதானத்தில் விளையாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இன்றைய போட்டியில் வெற்றியை பெற்று இருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன். பவுலிங் மற்றும் பில்டிங் இரண்டிலும் இன்னும் கவனம் தேவை. பேட்ஸ்மேன்கள் எந்த இடத்தில் பலமாக இருப்பார்களோ, அங்கு சரியாக பந்து வீசியது போல தெரிந்தது. அதையும் அடுத்த போட்டிக்குள் சரி செய்ய வேண்டும்.” என்றார்.