“ஜடேஜாவை விட அக்சர் படேலை சிறந்தவராக மாற்றுவது இதுதான்.. அவருக்கே வாய்ப்பு” – பார்த்திவ் படேல் பேச்சு

0
87
Axar

2024 டி20 உலகக் கோப்பை தொடர் ஜூன் மாதம் 15ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா என இரு நாடுகளில் துவங்கி நடைபெறுகிறது. இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கெடுக்கின்றன.

இந்த உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ஒவ்வொரு முக்கிய வீரர்களுக்கும் தேவையான மாற்று வீரர்களையும் உருவாக்கி வருகிறது.

- Advertisement -

இந்த வகையில் பேட்டிங் யூனிட்டுக்கு துவக்க இடத்தில் கில் மற்றும் ருதுராஜ் மாற்று வீரர்களாக இருக்கிறார்கள். மிடில் வரிசைக்கு சஞ்சு சாம்சன் மாற்று வீரராகவும் அதே சமயத்தில் மாற்று விக்கெட் கீப்பராகவும் இருக்கிறார்.

குல்தீப் யாதவுக்கு ரவி பிஸ்னாய், மேலும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நிறைய மாற்று ஆப்ஷன்கள் இருக்கின்றன. இதேபோல இடது கை சுழற்பந்து வீச்சுக்கு ஜடேஜா இடத்திற்கு அக்சர் படேல் மாற்று வீரராக பரிசோதிக்கப்பட்டு வருகிறார்.

இந்த பரிசோதனையில் இந்திய அணிக்கு ஒரு நல்ல தலைவலியாக ஜடேஜாவை விட அக்சர் படேல் சிறப்பான செயல்பாட்டை கொண்டவராக மாறி இருக்கிறார். அவர் கைப்பற்றும் விக்கெட்டுகள் மற்றும் ரன்கள் மட்டும் இதற்கு காரணம் கிடையாது. அவருடைய பந்து வீச்சில் உண்டாகி இருக்கின்ற மாற்றம்தான் முக்கிய காரணம். மேலும் அவர் ஆட்டத்தில் எல்லா பகுதிகளும் பந்து வீசக்கூடியவராக இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல் பேசும் பொழுது ” அவர் எவ்வளவு துல்லியமாகப் பந்து வீசுகிறார் என்பது தான் அவருடைய பலம். பெரும்பாலும் அவர் பந்தை அடிப்பதற்கு ஏதுவான ஸ்லாட்டில் வீசுவதில்லை. வேண்டுமானால் நீங்கள்தான் வாய்ப்புகள் எடுத்து அவரை அடிக்க வேண்டும்.

மேலும் நீங்கள் கால்களை நகர்த்தி இடம் கொடுத்து அவரை அடிப்பது என்பதும் முடியாத காரணம். ஏனென்றால் அவருடைய பந்துவீச்சின் வேகம் அதிகமாக இருக்கிறது. நீங்கள் உங்களை அட்ஜஸ்ட் செய்து அடிப்பதற்கு நேரம் இருக்காது.

இங்கு நாம் ரவீந்திர ஜடேஜாவை பற்றி பேசுகிறோம், ஆனால் அக்சர் படேல் ஆட்டத்தில் எல்லா பகுதிகளும் பந்து வீசக்கூடியவராக இருக்கிறார். அவர் பவர் பிளேவிலும் பந்து சிறப்பாக வீசுகிறார். இதுதான் அவரை ஜடேஜாவை விட இன்னும் சிறந்த வீரராக மாற்றுகிறது” என்று கூறியிருக்கிறார்.