“நானும் ஜெய்ஸ்வாலும் இதைத்தான் முடிவு செய்தோம்.. கேப்டன் ஹேப்பி!” – சிவம் துபே பேட்டி

0
499
Dube

இன்று இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருக்கிறது.

இந்த போட்டியில் டாஸ் தோற்று இந்த முறையும் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, பேட்டிங் செய்ய சாதகமான இந்து ஆடுகளத்தில் 172 ரன்கள் மட்டுமே 20 ஓவர்களில் சேர்த்து ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

இந்திய பந்துவீச்சாளர்களில் இந்தப் போட்டியிலும் அக்சர் படேல் மிகச் சிறப்பாக கடினமான லென்த்களில் பந்துவீசி அசத்தார். அவர் நான்கு ஓவர்களுக்கு 17 ரன்கள் மட்டும் தந்து இரண்டு முக்கிய விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கடுத்து பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா ரன் ஏதும் இல்லாமல் விராட் கோலி 29 ரன்களிலும் வெளியேறினார்கள்.

ஆனாலும் அடுத்த ஜோடி சேர்ந்த இளம் வீரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் சிவம் துபே இருவரும் சேர்ந்து ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை நொறுக்கி தள்ளி, இருவரும் அதிரடியாக அரை சதங்களைக் கடந்து, இந்திய அணி 15.4 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற உதவியாக இருந்தார்கள்.

- Advertisement -

இந்தக் கூட்டணியில் சிவம் துபே இறுதிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்று 32 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து அசத்தினார். மேலும் பந்துவீச்சில் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்.

போட்டியை வெற்றிகரமாக முடித்ததற்கு பின்னால் பேசிய சிவம் துபே “எனது ஆட்டத்தால் எங்கள் கேப்டன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். நான் நன்றாக விளையாடியதாக அவர் என்னிடம் கூறினார். நானும் ஜெய்ஸ்வாலும் அடித்து விளையாடும் வீரர்கள். எனவே நாங்கள் அடித்து விளையாடி சீக்கிரத்தில் ஆட்டத்தை முடிப்பதாக திட்டமிட்டோம்.

எங்கள் மனதில் இலக்கு என்று எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் நாங்கள் இன்னும் கொஞ்சம் சீக்கிரமாகவே ஆட்டத்தை முடித்திருக்க வேண்டும்.

நான் என்னுடைய திறமையை தாண்டி உழைத்த வேறு சில விஷயங்கள் இருக்கின்றன. டி20 போட்டிக்கு நீங்கள் மனரீதியாக எப்படி தயாராகிறீர்கள் என்பது முக்கியம். அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது, எந்த பந்துவீச்சாளரை குறி வைத்து அடிப்பது என்பது முக்கியம். எல்லாப் பந்தையும் அடிப்பது முக்கியம் கிடையாது.

நான் தற்போது என்னுடைய பந்து வீச்சிலும் வேலை செய்து வருகிறேன். முதல் ஆட்டத்தில் எனது பந்துவீச்சு நன்றாக இருந்தது. இன்றைய போட்டியில் அப்படி இல்லை. ஆனால் டி20 கிரிக்கெட் இப்படியானதுதான்” என்று கூறியிருக்கிறார்.