“நான் சூரியகுமார பார்த்தா கட்டாயம் இதைத்தான் சொல்லுவேன்!” – ரவி சாஸ்திரி சொல்லி இருக்கும் மாஸ் அட்வைஸ்!

0
325
Surya

கிரிக்கெட் உலகில் சில பேட்ஸ்மேன்களின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. மேலும் அவர்களை யாராலும் நகலெடுக்கவும் முடியாது.

இந்த வகையிலான ஒரு அதிரடியான பேட்ஸ்மேன் இந்தியாவின் சூரியகுமார் யாதவ். அவர் ஆட்டம் சூடு பிடித்து விளையாடக்கூடிய சில ஷாட்ஸ்களை, வித்தியாசமான ஷாட்ஸ்களின் ராஜாவான ஏபி டிவிலியர்சால் கூட முடியாது.

- Advertisement -

ஏபி டி வில்லியர்ஸ் தன்னை சூரியகுமாரின் ரசிகர் என்று கூறும் அளவுக்கு, சூரிய குமாரின் அபாரமான பேட்டிங் திறமை இருந்து வருகிறது.

ஆனால் அவர் டி20 வடிவத்தில் இருந்து தன்னை ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திற்கு மாற்றிக்கொள்ள மிகவும் சிரமப்பட்டு வருகிறார். டி20 கிரிக்கெட்டில் அசுரத்தனமாக தெரியும் அவர், ஒருநாள் கிரிக்கெட்டில் சாதாரண பேட்ஸ்மேனாக தெரிகிறார்.

- Advertisement -

ஒரு நாள் கிரிக்கெட்டில் அவருடைய ஷாட் தேர்வுகள் மிகவும் குழப்பமான ஒன்றாகவும் மோசமான ஒன்றாகவும் இருக்கிறது. டி20 கிரிக்கெட்டில் அவர் களத்தில் இருக்கும் பொழுது காட்டும் நம்பிக்கையும், ஒருநாள் கிரிக்கெட்டில் களத்தில் இருக்கும்போது காட்டும் நம்பிக்கையும் வேறாக இருக்கிறது.

இதன் காரணமாக உலகக் கோப்பை இந்திய அணியில் இவருடைய இடத்தில் சஞ்சு சாம்சனை தேர்வு செய்திருக்க வேண்டும் என்று இப்பொழுது வரை ரசிகர்கள் பலர் தங்களுடைய விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் சூரியகுமார் மேல் நம்பிக்கை வைத்து தொடர்ந்து அவரை ஆதரித்து வருகிறது. இதை நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெளிவுபடுத்து இருந்தார்.

தற்பொழுது இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சூரியகுமார் பற்றி கூறும்பொழுது “நான் அவரிடம் பேசினால், நான் இதைத்தான் சொல்லுவேன். 50 ஓவர் கிரிக்கெட் இனம் பொழுது உங்கள் கையில் கொஞ்சம் நேரம் இருக்கிறது. நீங்கள் அதிகமாக எதையும் மாற்றிக் கொள்ள தேவையே கிடையாது. நீங்கள் எல்லாவற்றையும் மிக எளிமையாக வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் டி20 கிரிக்கெட் விளையாடுவது போலவே விளையாடுங்கள்.

50 ஓவர் கிரிக்கெட் என்பதால் நீங்கள் உங்களுக்கு கூடுதலாக ஒரு ஐந்து பந்துகளை கொடுங்கள். உங்களுக்கு அதற்கு அனுமதி உண்டு. ஆனால் வேறு எதையும் மாற்ற வேண்டாம். ஒரே டெம்போவில் ஆட்டத்தை கட்டமையுங்கள். உங்களைச் சுற்றி மற்ற பேட்ஸ்மேன்கள் விளையாடட்டும். நீங்கள் 40, 50 பந்துகள் உங்கள் வழியில் விளையாடினால் நீங்கள் தனியாகவே ஆட்டத்தை வென்று விட முடியும்!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -