“இந்திய அணிக்கு இது தேவையில்லாத வேலை.. வருத்தப்பட போறிங்க.. சொன்னா கேளுங்க!” – வாசிம் அக்ரம் எச்சரிக்கை!

0
26667
Akram

இந்திய அணி நேற்று ஆசியக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இலங்கை அணிக்கு எதிராகப் பெற்ற வெற்றி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது!

வெளியில் இருந்து இந்திய அணி பற்றி மிக நல்ல விதமான பேச்சுகள் வெளிவர ஆரம்பித்து இருக்கின்றன. இந்திய அணியின் பலம் குறித்து இப்பொழுது இந்திய ரசிகர்களை நல்ல விதமாக உணர்கிறார்கள்.

- Advertisement -

இதையெல்லாம் தாண்டி மிக முக்கியமாக இந்திய அணியினர் நல்ல நம்பிக்கையுடன் நல்ல மனநிலையுடன் இருப்பது அவர்கள் களத்தில் செயல்படும் விதத்தில் மிகத் தெளிவாகத் தெரிகிறது.

இந்தியாவில் அக்டோபர் ஐந்தாம் தேதி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடங்க இருக்கும் நிலையில், இந்திய அணிக்கு கிடைத்திருக்கும் உத்வேகமும் இந்த வெற்றியும் மிக முக்கியமான ஒன்றாக அமைந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக இது இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் மற்றும் அதன் ரசிகர்களுக்கு மிக நல்ல செய்தி.

இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் வாசிம் அக்ரம் கூறும் பொழுது ” ரோகித் சர்மா ஒரு கேப்டனாக எனக்கு எந்த விதத்தில் பிடிக்கிறார் என்றால், அவர் களத்தில் மிகவும் அமைதியாக இருக்கிறார். பொதுவாக அவர் மிகவும் அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் வீரர். அவர் பல ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறார்.

- Advertisement -

மேலும் அவர் அனுபவம் வாய்ந்த மற்றும் திறமையான கேப்டனாக ஒரு திறமையான அணியை வழி நடத்துவதற்கு தகுதியானவராக இருக்கிறார். இந்தியாவை உலகக்கோப்பையில் வழிநடத்த ரோகித் சர்மா மிகச்சரியானவர், தகுதியானவர்.

இஷான் கிஷான் போன்ற இளம் வீரர்களுடன் தனது ஆதரவை வழங்கி அணிக்கு மிகவும் ஆதரவாக விராட் கோலி இருந்து வருகிறார். கேஎல் ராகுல் மிக நன்றாக திரும்பி வந்தார். உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணிக்கு எல்லாம் நல்ல விதத்தில் செல்கிறது.

- Advertisement -

நடக்க இருக்கும் உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் முக்கிய ஆயுதமாக இருப்பார். இந்தியா உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கின்ற ஒரு அணி. அவர்களுடைய தொடக்க வீரர்கள் மற்றும் அவர்களுடைய பந்துவீச்சாளர்கள் என்ன செய்ய முடியும் என்பதை பார்த்தோம். மேலும் அவர்கள் தங்களுடைய சொந்த நாட்டில் விளையாடுகிறார்கள்.

ஆசியக் கோப்பையில் பெரிய அணிகளுக்கு எதிரான போட்டியில் முக்கிய விக்கெட்டுகளை குல்தீப் யாதவ் கைப்பற்றினார். எனவே இந்தியா ஒரு முழுமையான பக்கமாக இருக்கிறது. இப்படியான வீரர்களை தொடர்ச்சியாக ஆதரித்து ஒரு அணியை கட்டமைத்ததற்கு ஆன பாராட்டு மற்றும் அங்கீகாரம் இந்திய சிந்தனைக் குழுவுக்கு சேரும்!” என்று கூறி இருக்கிறார்!

அதேசமயத்தில் இந்திய அணிக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை கூறியுள்ள வாசிம் அக்ரம் கூறும் பொழுது “இந்தியாவில் உலகக் கோப்பைக்கு பல மைதானங்கள் உள்ளன. இதனால் ஒவ்வொரு போட்டிக்கும் ஒருநாள் பயணம் செய்ய வேண்டியதாக இருக்கும். எனவே ஆற்றலை பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்படி இருக்கும் பொழுது இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஏன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது என தெரியவில்லை. இது நீண்ட காலத்திற்கு முன்பே முடிவு செய்யப்பட்டு இருக்கலாம். ஆனாலும் இது தேவையற்றது.

உங்களுக்கு உள்நாட்டில் ஒரு மிகப்பெரிய தொடர் இருக்கும் பொழுது நீங்கள் சோர்வடைவதை விரும்ப மாட்டீர்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகளிலும் இந்தியாவின் சில வீரர்கள் மட்டுமே விளையாடலாம்!” என்று கூறியிருக்கிறார்!