தென்னாபிரிக்க மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்னும் இரண்டு தினங்களில் முடிவடைய இருக்கிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டி நடந்து முடிந்த நிலையில் ஒரு போட்டியில் இந்திய அணியும் மற்றொரு போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடர் வெற்றியை தீர்மானிக்கும் கடைசி மற்றும் இறுதிப் போட்டியை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 10 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 79 ரன்கள் குவித்தார். பின்னர் ஆடிய தென் ஆபிரிக்க அணி முதல் இன்னிங்சில் புலிகள் 10 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது. தென்ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக கீகன் பெட்டர்சன் 72 ரன்கள் குவித்தார்.
13 ரன்கள் முன்னிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 198 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. விக்கெட் கீப்பர் பண்ட் அபாரமாக ஆடி சதம் விளாசினார். 212 ரன்களை இலக்காக கொண்டு தென்னாபிரிக்கா களமிறங்கியது. கீகன் பீட்டர்சன் உதவியால் 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்று தொடரையும் கைப்பற்றியது. இரண்டாவது இன்னிங்ஸில் 82 ரன்கள் சேர்த்த கீகன் பீட்டர்சன் ஆட்ட நாயகன் & தொடர் நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.
எனது கிரிக்கெட் கேரியரில் நான் சந்தித்த கடினமான பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் உள்ளனர்
தென்னாபிரிக்க அணியில் முதல் இன்னிங்சில் அதிக பட்சமாக 72 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 82 ரன்கள் குவித்த கீகன் பெட்ட்டர்சன், “எனது கிரிக்கெட் கேரியரில் நான் சந்தித்த சவாலான அதேசமயம் கடினமான பந்துவீச்சு எது என்றால் அது இந்திய அணியின் பந்துவீச்சு தான். தற்போது உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர்கள் அந்த அணியில் இருக்கின்றனர்.
தொடர் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பாகவே அந்த அணியின் பந்துவீச்சு பற்றி எங்களுக்கு நன்கு தெரியும். அவர்களை எப்படி சமாளிப்பது என்கிற யுக்தியுடன் தான் டெஸ்ட் தொடரில் விளையாட ஆரம்பித்தோம். அவர்கள் பேட்ஸ்மேனை ரன் அடிக்க விடாமல் தொடர்ந்து நெருக்கடி கொடுப்பார்கள். சிறிது கவனம் சிதறினாலும் அவர்கள் எளிதாக விக்கெட்டை கைப்பற்றவிட கூடிய ஆற்றல் படைத்தவர்கள்”, என்று இந்திய அணியின் பந்துவீச்சை பற்றி பெருமையாக கூறியுள்ளார்.
மூன்றாவது வீரராக களமிறங்கி விளையாடினால் மகிழ்ச்சியாக இருக்கும்
எனது கிரிக்கெட் கேரியரில் நான் அதிகமாக மூன்றாவது இடத்தில் தான் களம் இறங்கி விளையாடி இருக்கிறேன். தென் ஆப்பிரிக்க அணியிலும் 3-வது இடத்தில் களம் இறங்கி விளையாடினால் நான் சந்தோஷப்படுவேன். இருப்பினும் அணியில் ஒரு வீரராக இருப்பது எனக்கு பெருமை என்றும், என்னால் முடிந்தவரை எனது அணிக்காக ரன் குவிப்பதில் என்னுடைய முழு கவனம் இருக்கும் என்றும் கீகன் பெட்டர்சன் கூறியுள்ளார்.