முதல் டி20 நாங்கள் தோற்தற்கு இதுதான் காரணம் – இலங்கை கேப்டன் ஷனாகா பேட்டி

0
291
Dasun Shanaka

இந்திய அணி தற்போது இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வருகிறது. லக்னோ மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி மிகவும் எளிதாக வெற்றி பெற்றது. இந்திய அணியுடன் டி20 தொடரில் விளையாடுவதற்கு முன்னர் இலங்கை அணி ஆஸ்திரேலியா சென்று தொடரை இழந்தாலும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தது. அதே போல ஓரளவு சிறப்பான பந்து வீச்சை இந்திய அணிக்கு எதிராகவும் வெளிப்படுத்தும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் மிகவும் மோசமாக இலங்கை அணி பந்து வீசியது. இதன் காரணமாக எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் இந்திய பேட்டிங் வீரர்கள் மிகவும் எளிதாக இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளித்தனர்.

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சிறப்பாக விளையாடி 44 ரன்கள் எடுத்தார். ஸ்ரேயாஸ் அதிரடியாக 57 ரன்கள் குவித்தார். இவர்கள் இருவரையும் விட இளம் வீரர் இஷன் கிஷன் 89 ரன்கள் அடித்து இந்திய அணியை 199 ரன்கள் எடுக்க செய்தார் 20 ஓவர்களில். இலங்கை அணியின் பேட்டிங்கில் பொறுத்தவரை அசலங்கா தவிர வேறு யாரும் சிறப்பாக விளையாடவில்லை. இதன் காரணமாக இலங்கை 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது.

- Advertisement -

இந்த முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து தற்போது இலங்கை அணியின் கேப்டன் தஷுன் ஷனகா தன்னுடைய கருத்துகளை பதிவு செய்துள்ளார். அதில் இந்திய அணி பேட்டிங் பவுலிங் மற்றும் பீல்டிங் என மூன்று விதத்திலும் சிறப்பாக செயல்பட்டதாகவும் ஆட்டத்தின் போக்கை அவர்கள் சிறப்பாக கண்டதாகவும் அவர் பேசியுள்ளார். மேலும் இலங்கையைச் சேர்ந்த முக்கிய சுழற்பந்து வீச்சாளர்களான ஹசரங்கா மற்றும் தீக்ஷனா ஆகியோர் இல்லாதது இந்த தொடரில் பெரும் பின்னடைவாக தங்களுக்கு அமைந்து இருப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும் முதல் போட்டியில் களம் கண்ட சில வீரர்கள் அனுபவமற்ற வீரர்கள் என்றும் அவர் பேசியுள்ளார்.

இந்தத் தொடரை விறுவிறுப்பாக மாற்ற வேண்டும் என்றால் இலங்கை அணி நிச்சயம் சிறப்பான பேட்டிங் மற்றும் பவுலிங்கை வெளிப்படுத்தியாக வேண்டும். இல்லையென்றால் மிகவும் எளிமையாக இந்திய அணி இந்த தொடரை கைப்பற்றும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -
- Advertisement -