“டெஸ்ட் தொடரிலிருந்து சூரியகுமார் யாதவை நீக்கியதற்கு காரணம் இதுதான்” – பிசிசிஐ நிர்வாகி விளக்கம்!

0
1234

இந்திய அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான டெஸ்ட் அணி தேர்வு தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து நீடித்து வருகிறது . இந்திய தேர்வு குழுவிற்கு எதிராக முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர் .

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ்ல் சுற்றுப் பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் ஆடை இருக்கிறது இந்தத் தொடருக்கான இந்திய அணியில் புஜாரா மற்றும் சூர்யா குமார் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டனர் இந்திய அணியில் புதுமுகங்களான ருத்ராஜ் கெயிக்வாட் மற்றும் யஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் டெஸ்ட் அணியில் இடம் பெற்றனர்.

- Advertisement -

சமீப காலமாக ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சர்பராஸ் காணும் அணியில் இடம்பெறவில்லை. இது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் இந்திய தேர்வுக்குழுவை கடுமையாக கண்டித்திருந்தார். மேலும் ரஞ்சி டிராபி போட்டிகளை நடத்தாதீர்கள் எனவும் அவர் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார் .

மேலும் சமீபகாலமாக இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று வந்த சூரியகுமார் யாதவ் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெறவில்லை இது குறித்து ரசிகர்களும் கிரிக்கெட் விமர்சகர்களும் கேள்வி எழுப்பி வந்தனர் . இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தற்போது விளக்கம் அளித்திருக்கிறார் .

இது குறித்து தனது கருத்தை தெரிவித்து இருக்கும் அவர் ” இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் புது முகங்களை அறிமுகப்படுத்த நினைக்கிறது . அதற்காக சூரியகுமார் யாதவ் எனி டெஸ்ட் அணியில் இடம்பெற மாட்டார் என்று கூற முடியாது. இந்தத் தொடரில் அவர் இடம் பெற்றால் ருத்ராஜ் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு முன்பாக அவர்தான் களம் இறக்கப்படுவார் . ஆனால் அணி நிர்வாகம் புது முகங்களை சோதித்துப் பார்க்க நினைப்பதால் இந்த அணியில் அவரிடம் பெறவில்லை”என தெரிவித்திருக்கிறார்

- Advertisement -

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசி இருக்கும் அவர்” ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை ஆகிய இரண்டு முக்கியமான போட்டி தொடர்கள் இருப்பதால் சூரியகுமார் யாதவ் அதிக அளவில் வெள்ளைப்பந்து கிரிக்கெட் போட்டியில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவும் இந்த டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பெறவில்லை என தெரிவித்திருக்கிறார் . இனி வரும் காலங்களில் அவருக்கான டெஸ்ட் வாய்ப்புகள் அதிகமாக வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பெற்றதால் துலிப் டிராபி போட்டியிலிருந்து ருத்ராஜ் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் வழங்கி இருக்கின்றனர் அவர்களுக்கு பதிலாக மேற்கு மண்டல அணியில் சத்திஸ்வர் புஜாரா மற்றும் சூர்யா குமார் யாதவ் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர் .