“கேமரூன் கிரீனை வாங்கினதுக்கு இதான் காரணம்.. இந்த முறை ஆர்சிபிய பாருங்க!” – டீம் டைரக்டர் பேட்டி!

0
5566
RCB

ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய தொகைக்கு டிரேடிங் செய்யப்பட்ட வீரராக மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து 17.25 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு கேமரூன் கிரீன் டிரேடிங் செய்யப்பட்டு இருக்கிறார்.

இந்த முறை ஹர்சல் படேல், ஹசரங்கா, ஹேசில்வுட் என அதிக பணம் கொடுத்து வாங்கிய முக்கிய வீரர்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அதிரடியாக விடுவித்தது.

- Advertisement -

இதன் காரணமாக அந்த அணியின் கையில் மொத்தம் 42 கோடி பணம் இருந்தது. எனவே நடைபெற இருக்கும் மினி ஏலத்தில் அந்த அணியின் கையே முதலில் ஓங்கி இருக்கும் என எல்லோரும் நினைத்து இருந்தார்கள்.

இந்த நிலையில் வீரர்கள் தக்க வைப்புக்கான காலக்கெடு முடிந்ததற்கு பிறகு, மும்பை இந்தியன்ஸ் அணியிடம் இருந்து கேமரூன் கிரீனை பணம் கொடுத்து பெங்களூர் அணி பரிமாற்றம் செய்தது.

கேமரூன் கிரீன் ஒரு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என்றாலும் கூட, அவர் வேகம் மற்றும் சுழற் பந்துவீச்சு என இரண்டையும் சிறப்பாக எதிர்கொள்ள கூடியவர். நன்கு உயரம் இருக்கின்ற காரணத்தினால் பேட்டிங்கில் அவருக்கு நல்ல ரீச் இருக்கும். மேலும் ஐபிஎல் தொடரில் ஒரு சதமும் அடித்திருக்கிறார். இதன் காரணமாக அவர் மிடில் ஆர்டரில் பெங்களூர் அணிக்கு நல்ல பலமாக இருப்பார். பெங்களூர் அணிக்கு பிரச்சனையே மிடில் ஆர்டர்தான் கடந்த வருடம் இருந்தது.

- Advertisement -

தற்பொழுது ஆர்சிபி டீம் டைரக்டர் போபட் கிரீனை வாங்கியது குறித்து கூறும் பொழுது “அவர் மிடில் ஆர்டர் பவர் ரோலில் எங்களுக்கு மிகவும் முக்கியமானவர். அவர் உயர்தரமான திறமை வாய்ந்த பேட்ஸ்மேன் மற்றும் நல்ல வேகப்பந்துவீச்சாளர். மேலும் சின்னசாமி மைதானத்தில் விளையாடுவதை அவர் விரும்புவார்.

கிரீன் வேகம் மற்றும் சுழல் என இரண்டிலும் சிறப்பாக விளையாடக்கூடியவர். எனவே அவர் விளையாடுவதை பார்க்க ஆர்வமாக இருக்கிறோம். மேலும் அவர் பந்துவீச்சில் வேகம் மற்றும் பவுன்ஸ் இருக்கும். இது சின்னசாமி ஆடுகளத்திற்கு நல்ல விஷயமாகும். மேலும் அவர் சிறந்த பீல்டர் என்பதும் கூட முக்கியமானது.

நாங்கள் அவரை முன்கூட்டியே வாங்கியதற்கான காரணம், ஏலத்திற்கு வந்தால் அவர் இதே விலைக்கு கிடைப்பாரா என்பது உறுதி கிடையாது. மேலும் அவருக்கு வேறு யாராவது ஏலத்தில் செல்லலாம். எனவே இதையெல்லாம் மனதில் வைத்து நாங்கள் அவரை ஏலத்திற்கு முன்பாகவே வாங்கி விட்டோம்!” என்று கூறியிருக்கிறார்!