“நான் பெரிய சிக்ஸர் அடிக்க காரணம் இதுதான்!” – ரிங்கு சிங் ஜிதேஷ் சர்மாவிடம் சொன்ன ரகசியம்!

0
1194
Rinku

நேற்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சத்தீஸ்கர் ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் ரிங்கு சிங் மற்றும் ஜிதேஷ் சர்மா இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்கள்.

நேற்றைய போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்யும்பொழுது 13.2 ஓவரில் 111 ரன்களுக்கு இந்திய அணி நான்கு விக்கெட் இழந்தது. அந்த நேரத்தில் ருத்ராஜ் வெளியேறியது இந்திய அணியின் ரன் ரேட்டுக்கு பெரிய பாதிப்பாக இருக்கும் என்று எல்லோரும் நினைத்தார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் களத்தில் நின்ற ரிங்கு சிங்குடன் ஜிதேஷ் சர்மா வந்து ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ரன் ரேட்டை சரிய விடாமல் அங்கிருந்து அதிரடியாகவே தொடர்ந்து ஆட ஆரம்பித்தது.

குறிப்பாக ஜிதேஷ் ஷர்மா கிரீஸ் கிரீன் ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் அடித்து இந்திய அணிக்கு உத்வேகத்தை அளித்தார். அங்கிருந்து ரிங்கு சிங் தொடர்ந்து நம்பிக்கையுடன் விளையாடினான்.

இவர்கள் இருவரும் நேற்று 13.3 ஓவரில் ஜோடி சேர்ந்து, 18.4 ஓவரில் 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்கள். ரிங்கு சிங் 29 பந்தில் 46 ரன்கள், ஜிதேஷ் சர்மா 19 பந்தில் 35 ரன்கள் எடுக்க, இந்திய அணியின் வெற்றிக்கு அது பெரிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

அணியின் வெற்றிக்குப் பிறகு ரிங்கு சிங் மற்றும் ஜிதேஷ் சர்மா உரையாடிக் கொண்டார்கள். இதில் ரிங்கு சிங் அமைதியைப் பற்றி பாராட்டிய ஜிதேஷ் சர்மா கூறும்பொழுது “இது உங்களின் முதல் தொடர் போல தெரியவில்லை. நான் பேட்டிங் செய்ய வந்த பொழுது பெரிய அழுத்தத்தில் இருந்தேன். நீங்கள் மிகவும் அமைதியாக இருந்ததோடு பந்தை தேர்வு செய்து சரியாக அடித்திர்கள்!” என்று கூறினார்.

மேலும் ரிங்கு சிங் பெரிய சிக்ஸர்கள் அடிப்பது எப்படி? என்று ஜிதேஷ் ஷர்மா கேள்வி கேட்க, அதற்கு பதில் அளித்த ரிங்கு சிங் கூறும் பொழுது “பளு தூக்குவதும், நல்ல உணவை உண்பதும் எனக்கு நல்ல சக்தியை கொடுக்கிறது. இதனால் பெரிய சிக்ஸர்கள் அடிக்க முடிகிறது!” என்று கூறினார்!