“இந்தியா தடுமாற வேண்டிய இடம் இது.. ஆனா செம்மையா சமாளிச்சாங்க!” – கேன் வில்லியம்சன் அதிரடி பேச்சு!

0
4348
Williamson

நடப்பு 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் இந்த வாரத்தின் இறுதி நாளுடன் முடிவுக்கு வர இருக்கிறது. ஒன்றரை மாதங்களுக்கு மேல் நடைபெற்று வந்த உலகக் கோப்பைத் தொடர் முடிகிறது!

இந்தநாள் வரை தற்பொழுது உலகக்கோப்பை தொடரில் இந்தியா தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் தாக்குப்பிடித்து அரை இறுதியில் நிற்கின்றன.

- Advertisement -

நாளை இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் அரையிறுதி போட்டியில் இருந்து ஒரு அணி உலகக் கோப்பை தொடரை விட்டு வெளியேற இருக்கிறது.

உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவில் நடக்கின்ற காரணத்தினாலும், ஏற்கனவே இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை வென்று இருந்த காரணத்தினாலும், கடந்த உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணி இடம் தோற்று இருந்ததாலும், இந்தப் போட்டிக்கு கூடுதல் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்திய உலகக்கோப்பை அணியை பொறுத்தவரையில், மாற்றுவீரரே இல்லாத ஒரு வீரராக ஹர்திக் பாண்டியா மட்டுமே இருந்தார். அவரது இடத்திற்கு யாருமே கிடையாது. இப்படி இருக்கும் பொழுது துரதிஷ்டவசமாக அவரே காயம் அடைந்தார். இது நடப்பு உலக கோப்பையில் அந்த நேரத்தில் இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் இதற்குப் பிறகு அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு சூரியகுமார் மற்றும் முகமது சமி இருவரும் உள்ளே வந்தார்கள். இதில் சமி வந்த பிறகு இந்திய அணியின் பந்துவீச்சு இன்னும் பலமடைந்தது. இந்திய அணி இந்த இக்கட்டை சமாளித்தது.

இதுகுறித்து பேசி உள்ள கேன் வில்லியம்சன் கூறும் பொழுது ” எல்லா அணிகளுமே வித்தியாசமான ஒரு சமநிலையை கொண்டு இருக்கின்றன. இதில் ஹர்திக் பாண்டியா காயம் அடைந்ததும் இந்தியா தங்களுடைய சமநிலையில் சிறிது மாற்றமடைந்தது.

இருந்தாலும் கூட அவர்கள் என்ன செய்ய நினைத்தார்களோ அதில் எந்த மாற்றத்தையும் ஹர்திக் பாண்டியா காயம் கொண்டு வரவில்லை. அவர்கள் அதை மிகச் சிறப்பாக சமாளித்து தாண்டி வந்திருக்கிறார்கள்.

நாங்கள் எப்பொழுதும் ஒரு வித்தியாசமான சமநிலையுடன் விளையாடி வருகிறோம். இந்த உலகக் கோப்பை தொடரை பொறுத்தவரை எடுத்துக் கொண்டால், பேட் மற்றும் பந்து என்று எல்லாவற்றிலும் நீங்கள் உடனுக்குடன் மிக விரைவாக தகுந்தாற்போல் மாறி மிகவும் அவசியம்!” என்று கூறி இருக்கிறார்!