“தோல்விக்கு இது ஒன்னுதான் காரணம்.. பயம் அகராதியிலேயே கிடையாது!” – திலக் வர்மா மாஸ் பேச்சு!

0
536
Tilak

இந்திய கிரிக்கெட் அணி தற்போது மிகவும் அதிரடியான அணுகுமுறையை பின்பற்றி வருகிறது. விக்கெட் விழுந்ததைப் பற்றி கவலைப்படாமல் பவர் பிளேவில் ரன் குவிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது.

நேற்றைய போட்டியில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ரன் ஏதும் இல்லாமல் ஆட்டம் இழந்தாலும் கூட, இந்திய அணி பவர் பிளே முடிவில்மூன்று விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்திருந்தது.

- Advertisement -

மேலும் பேட்டிங் வரிசை ஏழு வரை மட்டுமே இருந்தாலும் கூட, நேற்றைய ஆடுகளத்தில் 170 ரன்கள் சரியானதாக இருந்த போதிலும், இந்திய அணி 19.3 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது.

இந்த வகையில் சில காலமாக இந்திய அணி அச்சமற்ற கிரிக்கெட்டை விளையாடுவதில் ஆர்வம் காட்டுகிறது. ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா இதை முன் நின்று வழிநடத்தினார். ஆனால் டி20 கிரிக்கெட்டில் எல்லா வீரர்களுமே இதே பாணியில் தொடர்கிறார்கள்.

நேற்று முதல் இரண்டு விக்கெட்டுகள் விழுந்ததும், மூன்றாவது பேட்ஸ்மேனாக உள்ளே வந்த இளம் வீரர் திலக் வர்மா அதிரடியாக தனது இன்னிங்ஸை ஆரம்பித்தார். அங்கிருந்து சூரியகுமார் யாதவ் அதைத் தொடர்ந்தார். பிறகு ரிங்கு சிங் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார். கடைசியாக வந்த ஜடேஜா கூட அதிரடியாக விளையாடுவதில் ஆர்வம் காட்டினார். நேற்றைய போட்டியில் தோற்றாலும் கூட இந்த விஷயங்கள் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது இதுகுறித்து பேசி உள்ள திலக் வர்மா “நாங்கள் பந்துவீச்சில் பவர் பிளவில் கொஞ்சம் கூடுதலாக ரன்கள் கொடுத்தோம். ஆனாலும் நாங்கள் அதற்கு பிறகு வலுவாக திரும்பி வந்தோம். மழையினால் ஈரமான அவுட் ஃபீல்டு காரணமாக எங்களால் பந்தை நன்றாக கிரிப் செய்ய முடியவில்லை. இதுதான் தோல்விக்கு முக்கிய காரணம். ஆனால் நாங்கள் நன்றாக பேட்டிங் செய்தோம்.

தென் ஆப்பிரிக்காவில் விளையாடுவது எப்பொழுதும் நல்லது மற்றும் சவாலானது. இந்த நிலைமைகளுக்கும் கடினமான சூழ்நிலையில் விளையாடுவதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். மேலும் இப்படியான சூழ்நிலையில் நாங்கள் நன்றாகவே பேட்டிங் செய்தோம்.

எங்களுடைய தொடக்க ஆட்டக்காரர்கள் இன்று சிறப்பாக விளையாடவில்லை. ஆனால் அதற்குப் பிறகு நான் மற்றும் சூரியகுமார், ரிங்கு சிங் ஆகியோருக்கு நல்ல ரிதம் கிடைத்தது. நாங்கள் நன்றாக பேட்டிங் செய்தோம். ஆனால் ஈரமான அவுட்ஃபீல்டு எல்லாவற்றையும் மோசமாக்கி விட்டது.

நாங்கள் பேட்டிங் செய்த பொழுது விக்கெட் சற்று மெதுவாக இருந்தது. மேலும் ஆரம்பத்தில் பந்து கொஞ்சம் சீம் ஆனது. பிறகு சுழற் பந்துவீச்சுக்கு கொஞ்சம் சாதகமாக அமைந்தது. மார்க்ரம் மற்றும் சம்சி அவர்கள் தங்கள் வழியில் சிறப்பாக பந்து வீசினார்கள். அவர்களுக்கு நல்ல ஸ்பெல் அமைந்தது. இல்லையென்றால் நாங்கள் இருநூறு ரன்கள் சுலபமாக கடந்திருப்போம்!” என்று கூறி இருக்கிறார்!