“அவரது ஆட்டத்தில் இந்த ஒரு விஷயம் தான் பலகீனம் ” – அக்சர் படேல் பற்றி ரிக்கி பாண்டிங்!

0
278

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 4 போட்டிகளை கொண்டு டெஸ்ட் தொடர் சமீபத்தில் முடிவடைந்தது. இந்தத் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது .

இந்தியா அணிக்காக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் இந்தத் தொடரில் ஆரம்பம் முதலில் சிறப்பான டேட்டிங்கை வழங்கினர். விராட் கோலி இந்தத் தொடர் முழுவதும் சிறந்த பார்மில் இருந்தாலும் கடைசி டெஸ்ட் போட்டியில் தான் அவர் சதம் அடித்தார். இதன் மூலம் இந்திய அணிக்காக இந்த தொடரில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தை பெற்றார் விராட் கோலி.

- Advertisement -

இவருக்கு அடுத்தபடியாக இந்தத் தொடரில் அதிகமான பங்களிப்பை பேட்டிங்கின் மூலம் வழங்கியவர் அக்சர் பட்டேல் இவர் பந்துவீச்சின் மூலம் தான் இந்திய அணிக்கு சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனது பேட்டிங்கின் மூலம் இந்திய அணியை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீட்டார். இந்தத் தொடரில் மூன்று அரை சதங்களை அடித்திருக்கிறார் அக்சர் பட்டேல் . மேலும் அவர் நான்கு டெஸ்ட் போட்டிகளில் 264 ரன்கள் குவித்துள்ளார் .

நாக்பூரில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 84 ரன்கள் டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 74 ரன்கள் எடுத்திருந்தார். அகமதாபாத்தில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் 79 ரன்கள் எடுத்தார். மேலும் விராட் கோலி உடன் இவர் இணைந்து ஆறாவது விக்கெட் இருக்கு 162 ரன்கள் சேர்த்தார். இந்த பார்ட்னர்ஷிப் இந்திய அணி 91 ரன்கள் முன்னிலை பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இந்நிலையில் அக்சர் பட்டேலின் பேட்டிங் பற்றி ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனும் டெல்லி கேப்பிட்டல் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தனது கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார். இது பற்றி பேசியிருக்கும் பாண்டிங் ” அக்சர் பட்டேலின் பேட்டிங்கில் இருக்கக்கூடிய ஒரே குறை ஷாட் பால் ஆடுவது தான். அதுவும் நன்கு உடலை நோக்கி வீசப்படும் ஷார்ட் பாலுக்கு அவர் ஆட சற்று சிரமப்படுவார் என்று எனக்குத் தெரியும். அதற்குக் காரணம் அவரது சைடு ஆன் பேட்டிங் பொசிஷன் தான். நாங்கள் அவருடைய பேட்டிங் பொசிஷனை சிறிது மாற்ற முயற்சி செய்தோம். அதன் மூலம் அவரால் ஷார்ட் பாலை ஆக்சஸ் செய்ய முடியும் என்பதற்காக. அவர் எப்போதுமே ஒரு அழகான ஆப் சைட் வீரர்”என்று கூறினார் .

- Advertisement -

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசிய அவர் ” அக்சர் பட்டேல் ஒரு சிறந்த கவர் டிரைவ் அடிக்கக்கூடிய வீரர் மேலும் அவரது கட் ஷாட் மிகவும் சிறப்பான ஒன்று என்று தெரிவித்தார். எந்த ஒரு விஷயத்தையும் எளிதாக புரிந்து கொண்டு அதில் தவறு இருக்கும் பட்சத்தில் தன்னுடைய டெக்னிக்கை விரைவில் மாற்றி அதற்கேற்றார் போல் தன்னை தகவமைத்துக் கொள்ளும் ஒரு இளம் வீரர் எனக் குறிப்பிட்டார் பாண்டிங். அவருடைய இந்த கற்றுக் கொள்ளும் திறன் தான் அவரது பேட்டிங்கை மிகச் சிறப்பான ஒன்றாக மாற்றி இருக்கிறது என கூறி முடித்தார் ரிக்கி பாண்டிங்