வீடியோ: “2023 ஆம் வருட ஐபிஎல் இன் மிகச் சிறந்த பந்து”- சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டெயின் கருத்து !

0
332

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் மற்றும் டெல்லி அணிகள் மோதின . அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டெல்லி அணியும் முதலில் பேட்டிங் செய்தது .

முகமது சமியின் திறமையான பந்துவீச்சால் பவர் பிளே ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது டெல்லி . அமான் கான் அக்சர் பட்டேல் மற்றும் ரிப்புல் பட்டேல் ஆகியோரின் பங்களிப்பின் மூலம் 130 ரன்கள் எடுத்தது .

- Advertisement -

இந்த இலக்கை குஜராத் அணி எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் 125 ரன்கள் மட்டுமே எடுத்து ஐந்து இடங்களில் தோல்வியை தழுவியது . அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா 59 ரன்கள் உடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார் .

இந்தப் போட்டியில் டெல்லி அணியின் பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்தது கலில் அகமது இஷாந்த் சர்மா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் மிகச் சிறப்பாக பந்து வீசினர் . குறிப்பாக இந்திய அணியின் அனுபவ பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா மிகச் சிறப்பாக பந்து வீசினா.ர். நான்கு ஓவர்கள் வீசிய அவர் 23 ரன்களை விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார் . அதிலும் 6 பந்துகளுக்கு 12 ரன்கள் தேவை என்ற நிலையில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ராகுல் தீவாட்டியாவின் விக்கெட்டை இறுதி ஓவரில் வீழ்த்தி போட்டியை டெல்லியின் பக்கம் திருப்பினார் .

இவரது பந்துவீச்சு குறித்து தனது பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார் தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் டேல் ஸ்டெயின்

- Advertisement -

. இதுகுறித்து பேசி இருக்கும் ஸ்டெயின்” நேற்றைய போட்டியில் அனுபவ பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா மிகச் சிறப்பாக பந்து வீசினார். குறிப்பாக நக்ல் பால் மூலம் விஜய் சங்கரை கிளீன் போல்ட் செய்த விதம் என்னை மிகவும் கவர்ந்தது . நக்ல் பாலாக மட்டுமில்லாமல் அதனை ஒரு அவுட் ஸ்விங்கர் ஆக அவர் வீசியது மிகச் சிறப்பான ஒன்று . என்னை பொருத்தவரை 16வது ஐபிஎல் தொடரில் மிகச் சிறந்த பந்து இதுதான் என பாராட்டி இருக்கிறார் . விஜய் சங்கர் கிளீன் போல்ட் ஆன வீடியோ இந்த பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது