“இது அப்பட்டமான முட்டாள்தனம்!” – கோலிக்கு ஆதரவாக ஹபீஸை விளாசிய மைக்கேல் வாகன்.. ஆச்சரிய சம்பவம்!

0
5990
Virat

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி கட்டத்தில் இந்தியா தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிக்கொண்ட போட்டி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாக இருந்தது.

இந்தப் போட்டிக்கு டாசில் வெற்றி பெற்ற கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வது என தீர்மானித்தார். போட்டி நடைபெற்ற கொல்கத்தா ஆடுகளம் சற்று வித்தியாசமான ஒன்றாக இருந்தது.

- Advertisement -

ஆடுகளம் புதியதாக இருந்த பொழுது புதிய பந்தில் விளையாடுவதற்கு சிறப்பாக இருந்தது. அதே சமயத்தில் பவர் பிளே முடிந்து பழைய பந்தில் விளையாடுவது மிகவும் கடினமாக இருந்தது. குறிப்பாக சுழற் பந்துவீச்சில்.

இதன் காரணமாக களத்தில் இருந்த விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரையும் பொறுமையாக விளையாடச் சொல்லி அணி நிர்வாகம் தகவல் அனுப்பியது. தொடர்ந்து அவர்கள் பொறுமையாக விளையாடி, சுலபமான பந்துகளை மட்டும் தண்டித்தார்கள்.

இந்த நிலையில் விராட் கோலி கடைசி வரை களத்தில் நின்று 121 பந்துகளை சந்தித்து 101 ரன்கள் எடுத்தார். அவர் கடைசி கட்டத்திலும் நிதானமாகவே இருந்தார். இதற்கு அடுத்து இந்திய அணி 326 ரன்கள் குவித்து தென் ஆப்பிரிக்க அணியை 83 ரன்களுக்கு சுருட்டி, 243 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த நிலையில் 97 ரன்கள் எடுக்கும் வரை விராட் கோலி சிறப்பாக விளையாடியதாகவும், கடைசி மூன்று ரன்கள் அதாவது சதத்திற்காக, அவர் 49 ஆவது ஓவரிலும் சிங்கிள் எடுத்தது சுயநலம் என்றும், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ் குற்றம் சாட்டி இருந்தார். அதே நேரத்தில் ரோகித் சர்மாவை தியாகி என்றும் கூறியிருந்தார்.

இதுகுறித்து தற்பொழுது ட்விட் செய்திருக்கும் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் குறிப்பிடும் பொழுது ” கம்-ஆன் ஹபீஸ்.. அவர்கள் எட்டு போட்டிகளிலும் எதிரணியை நொறுக்கி இருக்கிறார்கள். விளையாட கடினமான ஆடுகளத்தில் விராட் கோலி ஆங்கர் ரோலில் விளையாடி 49 வது சதத்தை எடுத்திருக்கிறார். இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்திற்கு மேல் வெற்றி பெற்று இருக்கிறது. இப்படி இருக்கும் பொழுது இந்த கூற்று அப்பட்டமான முட்டாள்தனம்!” என்று சுட்டிக் காட்டி இருக்கிறார்!