“எங்க டீம்க்கு இப்ப இவர்தான் பெரிய எதிரி.. ஏன்னா உலக கோப்பையில..!” – அஷ்வின் அறிமுகப்படுத்திய நபர்!

0
132
Ashwin

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் செஞ்சுரியனில் தொடங்கவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் சிறப்பாக தயாராகி வருகின்றனர். சில நாட்களுக்கு முன் அவசர வேலையாக லண்டன் சென்றிருந்த விராட் கோலியும், நேற்று இந்திய அணியிடன் இணைந்து கொண்டார்.

தென்னாப்பிரிக்கா மண்ணில் இந்திய அணி இதுவரை ஒருமுறை கூட டெஸ்ட் தொடரை கைப்பற்றியதில்லை. அந்த அணியின் பவுலர்கள் பலரும் காயத்தால் விலகியுள்ள நிலையில், இந்திய அணி புதிய வரலாறு படைக்க சிறப்பான வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் இந்திய அணி மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

- Advertisement -

இதனிடையே தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஏ அணியுடன் இந்திய அணி பயிற்சி போட்டியில் பங்கேற்றது. டக்ஸ் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற பயிற்சி போட்டியில் சுப்மன் கில், ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டனர். இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான தயாரிப்பு பணிகள் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் முக்கியமான ஒருநபரை அறிமுகம் செய்துள்ளார். அதில், பாப்பா வெங்கடேஷ் என்பவரை அறிமுகம் செய்து வைத்த அஸ்வின், அவர்தான் உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணியின் மேனேஜராக செயல்பட்டார் என்று தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் இந்திய ஆணியின் மிகப்பெரிய எதிரி இவர்தான் என்று கூறி அவரை அறிமுகம் செய்து வைத்தார்.

இதன்பின் பாப்பா வெங்கடேஷ் பேசும் போது, கடந்த மாதம் ஆஸ்திரேலியா அணியின் மேனேஜராக செயல்பட்டேன். தற்போது அதே பணியைத்தான் இந்திய ஏ அணிக்காக செய்து வருகிறேன். கடந்த மாதம் வரை வாழ்க்கை நிம்மதியாக சென்றது. அதன்பின் மொத்த அமைதியும் கெட்டுவிட்டதாக கிண்டல் செய்தார்.

- Advertisement -

மேனேஜர் பணி என்பது ஒவ்வொரு அணியும் வேறு நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்யும் போது அந்த அணி தரப்பில் ஒருவர் ஒப்பந்தம் செய்யப்படுவார். உள்ளூரில் என்னவெல்லாம் வீரர்களுக்கு தேவைப்படுகிறதோ, அதனை ஏற்பாடு செய்வோம். கடந்த மாதம் ஆஸ்திரேலியா அணிக்காக செய்த பணியை இம்முறை இந்திய ஏ அணிக்கு செய்கிறேன்.

கொஞ்சம் தெரிந்த முகங்கள் இருப்பதால், பணியும் எளிமையாக உள்ளது என்று தெரிவித்தார். மேலும் இந்த வீடியோவை முடிக்கும் போது இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின், ஆடு தானாக வந்து மாட்டி கொண்டதாக கிண்டல் பேசி முடித்தார்.