“இது ஐசிசி மேட்ச் இல்ல பிசிசிஐ மேட்ச்.. இந்தியாவ பைனல்ல பார்த்துக்கிறோம்!” – பாக் பயிற்சியாளர் குற்றச்சாட்டு!

0
6171
ICT

நடப்பு 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மிகப்பெரிய போட்டியான, இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி, இன்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற முடிவுக்கு வந்திருக்கிறது!

குறிப்பாகக் கடந்த மாதங்களில் நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடருக்கு முன்பாக பாகிஸ்தான் அணி மிகவும் வலிமையான அணியாக பலரால் கணிக்கப்பட்டு இருந்தது. அந்த அணி முழுமையாக இருப்பதாக பலரும் கூறி வந்தார்கள்.

- Advertisement -

அதே சமயத்தில் ஆசியக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணி குறித்து யாருக்கும் நல்லவிதமான நம்பிக்கை கிடையாது. மேலும் இந்திய அணி கடைசி வரை பரிசோதனை முயற்சிகளில் இருந்தது. இந்த நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் டி20 தொடரை இழந்தது. மேலும் முக்கிய வீரர்கள் காயத்தில் இருந்தார்கள்.

ஆனால் ஆசியக் கோப்பைத் தொடர் ஆரம்பித்ததும் இரு அணிகளின் மீதான மதிப்பீடும் அப்படியே நேர் எதிராக மாறிப்போனது. இந்திய அணி தன்னுடைய முக்கிய வீரர்கள் அனைவரையும் கொண்டு விளையாடி உச்சத்திற்கு சென்றது. ஆனால் பாகிஸ்தான அணி வெளியில் வந்து விளையாட அதன் பலவீனங்கள் வெளியே தெரிந்தது.

இந்த நிலையில் இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இரு அணிகளும் மோதிய போட்டியில் பாகிஸ்தான் அணியை 199 ரன்களில் சுருட்டி, இலக்கை 30.3 ஓவர்களில் எட்டி, இந்த உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியை பதிவு செய்து, இந்திய அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

- Advertisement -

இந்த உலகக் கோப்பை தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே சென்னையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகவும், பெங்களூரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகவும், அகமதாபாத்தில் இந்தியாவுக்கு எதிராகவும் விளையாட மாட்டோம், அட்டவணையை மாற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் மிகவும் பிடிவாதம் பிடித்தது.

இந்த நிலையில் இன்று தோல்விக்கு பின் பேசிய பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறும் பொழுது ” இன்று இரவு நடைபெற்றது ஐசிசி போட்டியாக தெரியவில்லை. பிசிசிஐ நடத்தும் போட்டி போல தான் இருந்தது. மைக்கில் எந்த இடத்திலும் “தில் தில் பாகிஸ்தான்’ என்று ஒரு முறை கூட ஒலிக்கவில்லை. ஆனால் நான் இதை ஒரு சாக்காக உங்களிடம் கூறப்போவதில்லை. நாங்கள் இந்தியாவை இறுதிப் போட்டியில் பார்த்துக் கொள்கிறோம்!” என்று குற்றச்சாட்டோடு சவால் விட்டிருக்கிறார்!