“இது புதுசா இருக்கு.. ஹர்திக் இடத்துக்கு குஜராத் டபுள் மாஸ்டர் பிளான்!” – சைமன் டால் பேச்சு!

0
604
GT

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, அந்த அணியை விட்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டிரேடிங் செய்யப்பட்டு சென்றுவிட்டார்.

இதன் காரணமாக ஒரு முழுமையான வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டரை குஜராத் டைட்டன்ஸ் இழந்து இருக்கிறது. மேலும் அவர்கள் கேப்டனையும் இழந்திருக்கிறார்கள்.

- Advertisement -

எனவே நடந்து முடிந்த ஏலத்தில் ஹர்திக் பாண்டியாவின் இடத்தை நிரப்புவது அந்த அணி நிர்வாகத்துக்கு முக்கிய கடமையாக இருந்தது. மேலும் அதில் அவர்கள் வித்தியாசமான முறையில் கொஞ்சம் வெற்றியும் பெற்று இருக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானின் அஸமத்துல்லா ஓமர்சாய் வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர். எனவே அவர் ஹர்திக் பாண்டியா போல இருந்தாலும் இந்திய வீரராக இல்லாமல் இருப்பதால், ஹர்திக் பாண்டியா இடத்தை நிரப்புவதில் கொஞ்சம் பின்னடைவு ஏற்பட்டது.

தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் நியூசிலாந்தின் முன்னாள் வீரர் சைமன் டால் கூறும்பொழுது “ஹர்திக் பாண்டியா விட்டுச் சென்றதால் ஏற்பட்ட ஓட்டையை அவர்கள் அடைத்து விட்டார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அவர்கள் இந்திய வேகப்பந்துவீச்சாளர் கார்த்திக் தியாகி இடம் சென்று இருக்கிறார்கள். இதே இடத்தில் உமேஷ் யாதவும் முக்கியமானவர். மேலும் 50லட்சத்தில் அஸமத்துல்லா ஓமர்சாயை திருடிவிட்டார்கள்.

- Advertisement -

குஜராத் டைட்டன்ஸ் ஏலம் மிகவும் சுவாரசியமானது. அவர்கள் இம்பேக்ட் பிளேயர் விதியை பயன்படுத்தி ஹர்திக் பாண்டியா இடத்தை நிரப்ப பார்க்கிறார்கள். அதாவது பந்துவீச்சில் உமேஷ் யாதவ், பேட்டிங்கில் ஷாருக்கான் என வைத்து, ஹர்திக் பாண்டியா இடத்தை நிரப்புகிறார்கள்.

உமேஷ் யாதவ் முழுமையான நான்கு ஓவர்கள் வீசவில்லை என்றாலும் கூட, ஹர்திக் பாண்டியா போல இரண்டுக்கும் மேற்பட்ட ஓவர்கள் வீசுவார். மேலும் ஷாருக்கான் பேட்டிங்கில் 5 இல்லை ஆறாம் இடங்களில் பினிஷராக ஹர்திக் பாண்டியா போன்று விளையாடுவார். இப்படி ஹர்திக் பாண்டியா இடத்தை நிரப்ப குஜராத் டைட்டன்ஸ் திட்டமிட்டு இருக்கிறது!” என்று கூறி இருக்கிறார்!