வீடியோ.. “இது முடியாத காதல் கதை..!” – பாகிஸ்தான் ஃபீல்டிங்கை பங்கமாய் கலாய்த்த ஷிகர் தவான்!

0
189
Shikar

இன்று மொத்தம் மூன்று பயிற்சி போட்டிகள் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பைக்கு நடைபெறுகிறது. இதில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்திய மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த பயிற்சி போட்டி, மழையின் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்னொரு பயிற்சி போட்டியில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து அசாம் மாநிலம் கவுஹாத்தி மைதானத்தில் விளையாடி வருகிறது.

- Advertisement -

மேலும் ஒரு பயிற்சி போட்டியில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஹைதராபாத் நகரில் ராஜீவ் காந்தி மைதானத்தில் மோதி வருகிறது.

இந்த போட்டிக்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்வது என தீர்மானித்தது. கடந்த முறை பேட்டிங் செய்ய வராத வார்னர் மற்றும் மார்ஸ் இருவரும் துவக்க வீரர்களாக வந்தார்கள். இருவரும் தங்கள் பங்குக்கு 48 மற்றும் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.

அடுத்து வந்த ஸ்மித் மற்றும் லபுஷன் இருவரும் 27 மற்றும் 47 ரன்களில் வெளியேறினார்கள். மேக்ஸ்வெல் அதிரடியாக 71 பந்தில் 77 ரன்கள் எடுத்தார். அலெக்ஸ் கேரி 11, இறுதிக்கட்டத்தில் அதிரடியாக ஜோஸ் இங்கிலீஷ் 30 பந்தில் 48, கேமரூன் கிரீன் 40 பந்தில் ஆட்டம் இழக்காமல் 50 ரங்கல் எடுக்க ஆஸ்திரேலியா அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இந்த போட்டியில் வழக்கம் போல் பாகிஸ்தான் அணி ஒரு விஷயத்தை தவறாமல் செய்தது. அது ஃபீல்டிங்கில் தவறவிடுவது. இந்த முறையும் அதற்கு விதிவிலக்கு இல்லாமல் நகைச்சுவையான முறையில் களத்தடுப்பில் பந்துகளை பாகிஸ்தான் தவறவிட்டது.

பாகிஸ்தான் அணியின் முகமது நவாஸ் மற்றும் ஜூனியர் வாசிம் இருவரும் ஒரு பந்தை பிடிக்க வந்து, யார் பிடிப்பது என்பதில் தடுமாறி, பந்தை பிடிக்காமல் விட்டு மீண்டும் இருவரும் சேர்ந்து பந்தை பிடிப்பதற்காக ஓடினர். இந்த காட்சியை பார்க்க நகைச்சுவையாக இருந்தது. சமூக வலைதளத்தில் பல ரசிகர்கள் இதை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய அணியின் மூத்த வீரர் ஷிகர் தவான் பாகிஸ்தான் வீரர்கள் பந்தை தவறவிட்ட வீடியோவை பதிவிட்டு, பாகிஸ்தான் அணியின் பீல்டிங் முடிவில்லாத காதல் கதை என்று தலைப்பிட்டு இருக்கிறார். கடைசியில் கிரிக்கெட் வீரர்களே கலாய்க்கும் அளவுக்கு பாகிஸ்தான் பீல்டிங் சென்றுவிட்டது!