“என்னோட வேலையே இதுதாங்க.. ஆனா கடைசியில..!” – ஆஸி கேப்டன் வேதனை பேச்சு!

0
5925
Wade

இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் முடிந்ததும் துவங்கப்பட்ட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனால் உலகக் கோப்பை போல் இல்லாமல் வெற்றிகரமாக இந்தியாவுக்கு முடிவுக்கு வந்திருக்கிறது.

இந்த தொடரில் முதலில் நடைபெற்ற நான்கு போட்டிகளில் இந்திய அணி மூன்று போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது. இது குறிப்பிடத்தக்க விஷயம் நான்கு போட்டிகளில் ஒருமுறை மட்டுமே இந்திய அணி டாஸ் வென்றது. பனிப்பொழிவு அதிகம் இருக்கும் காரணத்தினால் இங்கு டாஸ் வெல்வது அவசியம். ஆனால் இதில் பின்னடைவை சந்தித்து இருந்தாலும் இந்திய அணி சாதித்தது.

- Advertisement -

மேலும் இன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஐந்தாவது போட்டியிலும் இந்திய அணி டாஸ் தோற்றது. மேலும் ஆடுகளம் முதலில் பேட்டிங் செய்வதற்கு மெதுவாக கடினமாக இருந்தது. இதன் காரணமாக இந்திய அணி 16 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஸ்ரேயாஸ் ஐயர் 53 ரன்கள் எடுத்தார்.

இதற்கு அடுத்து பேட்டிங் செய்ய வந்த ஆஸ்திரேலியா அணிக்கு மேக் டோர்மேட் இந்த முறை சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்துக் கொடுத்தார். இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணி கடைசி ஓவர் வரை ஆட்டத்திலேயே இருந்தது.

ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மேத்யூ வேட் கடைசி ஓவருக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட பொழுது களத்தில் இருந்தார். இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணிக்கு வெற்றி கடினமான ஒன்றாக இருக்கவில்லை. மேலும் அவருடைய வேலையை ஆட்டத்தை ஃபினிஷிங் செய்து கொடுப்பதுதான்.

- Advertisement -

இந்த நிலையில் அர்ஸ்தீப் சிங் வீசிய கடைசி ஓவரின் இரண்டு பந்துகளை ரன் எடுக்காமல் விட்டு, மூன்றாவது பந்தில் மேத்யூ வேட்டி ஆட்டம் இழந்தார். இதன் காரணமாக ஆஸ்திரேலிய வெற்றி கனவு அங்கு தகர்ந்தது. மேலும் கடைசி மூன்று பந்துகளில் மூன்று ரன்கள் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்கு வந்தது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா 6 ரன்கள் வித்தியாசத்தில் ஐந்தாவது டி20 போட்டியில் தோல்வி அடைந்தது.

தோல்விக்கு பின் பேசிய ஆஸ்திரேலியா கேப்டன் மேத்யூ வேட் “பொதுவாக எடுத்துக் கொண்டால், நாங்கள் சேஸ் செய்வதற்கு வசதியான ஸ்கோருக்கு கீழேதான் அவர்களை கட்டுப்படுத்தி வைத்தோம் என்று நினைத்தேன். ஆனால் இது எங்களுக்கு ஒரு ஏமாற்றமாக மீண்டும் அமைந்துவிட்டது.

நான் ஆர்டரில் மேலே வந்து விளையாடுவது தொடர்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் உலகக்கோப்பை தொடர் நெருங்கிக் கொண்டிருக்கிறது. மேலும் என்னுடைய வேலையே இந்த இடத்தில் வந்து ஆட்டத்தை ஃபினிஷ் செய்து அணியை வெற்றி பெற வைப்பதுதான்.

இன்று வெற்றி பெற்று இருந்தால் அது மிகவும் நன்றாக இருந்திருக்கும். ஆனால் நாங்கள் தொடர்ச்சியாக கற்றுக் கொள்கிறோம். எங்கள் அணியில் இந்த போட்டியில் நான்கைந்து வீரர்கள் நல்ல முறையில் வந்தார்கள்!” என்று கூறி இருக்கிறார்!