“இலங்கைக்கு எதிரா இன்னைக்கு நாங்க இப்படித்தான் ஜெயிச்சோம்.. இதுக்கு பின்னாடி இதுதான் இருக்கு!” – ஆட்டநாயகன் பரூக்கி அசத்தல் பேட்டி!

0
629
Farooqi

இன்று ஆப்கானிஸ்தான அணி நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணியை வீழ்த்தி தனது மூன்றாவது வெற்றியைப் பெற்று அசத்தியிருக்கிறது.

இன்று டாஸ் வென்று முதலில் பந்து வீசிய ஆப்கானிஸ்தான அணி, பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்டு, 49.3 ஓவர்களில் இலங்கை அணியை பேட்டிங் செய்ய சாதகமான புனே ஆடுகளத்தில் 241 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது.

- Advertisement -

இதற்கு அடுத்து பேட்டிங் செய்ய வந்த ஆப்கானிஸ்தான் அணி முதல் ஓவரில் குர்பாஸ் விக்கெட்டை இழந்து இருந்தாலும் கூட, அடுத்தடுத்து வந்த விக்கெட்டுகள் மிகச் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை கொண்டு வந்து, 45.2 ஓவரில் மூன்று விக்கெட் மட்டும் இழந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான அணி இந்த உலகக் கோப்பை தொடரில் தற்பொழுது 6 போட்டிகளில் விளையாடி, மூன்று போட்டிகளில் வென்று, 6 புள்ளிகள் எடுத்து, புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இதன் காரணமாக ஆப்கானிஸ்தான அணி அரைஇறுதி வாய்ப்பில் பலமாக நீடிக்கிறது.

இன்று ஆப்கானிஸ்தான் அணிக்கு பந்துவீச்சில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக அணியில் இருந்து நீக்கப்பட்ட ஃபரூக்கி திரும்ப வந்து மிகச் சிறப்பாக செயல்பட்டு, பத்து ஓவர்களில் 38 ரன்கள் தந்து, நான்கு விக்கெட் கைப்பற்றி ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

- Advertisement -

போட்டி முடிவுக்குப் பின் பேசியுள்ள அவர் “சர்வ வல்லமை உள்ளவருக்கு நன்றி. நாங்கள் மூன்று வெற்றிகளை பெற்றுள்ளதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் அணியின் வெற்றிக்கு பங்களித்ததில் பெரிய மகிழ்ச்சி. நான் புதிய பந்தில் ஸ்விங் தேடினேன் ஆனால் கிடைக்கவில்லை. இதனால் சரியான ஏரியாக்களில் பந்தை அடித்து வீசினேன். பவுண்டரிகளை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. இதனால் நான் வெற்றிகரமாக இருந்தேன்.

முந்தைய போட்டிகளில் கடைசி சில ஓவர்களில் நாங்கள் ரன்களை நிறைய விட்டுக் கொடுத்தோம். வலைகளில் கடினமான யார்டுகளில் துல்லியமாகப் பந்துவீசி கடுமையாகப் பயிற்சி செய்தோம். மேலும் பந்துவீச்சில் பல வேரியேஷன்களையும் முயற்சி செய்தோம். இன்று நாங்கள் போட்டியில் அதைத்தான் செயல்படுத்தி வெற்றி பெற்றோம்!” என்று கூறி இருக்கிறார்!