“இந்திய கேப்டனுக்கு ஒழுக்கமும் மரியாதையும் இல்லனா இப்படித்தான்” – பிரச்சனையை இழுக்கும் பங்களாதேஷ் கேப்டன்!

0
7228
Harmanpreet

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட தொடர் என இரண்டு தொடர்களில் விளையாடி முடித்திருக்கிறது!

இதில் முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை, இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி முதல் இரண்டு ஆட்டங்களை வென்று மூன்றாவது ஆட்டத்தில் தோற்று கைப்பற்றியது.

- Advertisement -

இதற்கடுத்து நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியும் இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்று இருந்தன.

இதற்கு அடுத்து தொடரை யாருக்கு என்று முடிவு செய்யும் தொடரின் கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது.

இதற்கு அடுத்து விளையாடிய இந்திய அணி வெற்றிக்கு அருகிலேதான் இருந்தது. ஆனால் கடைசி கட்டத்தில் மடமடவென்று விக்கெட்டுகள் விழ போட்டி யாரும் எதிர்பார்க்காத விதமாக டை ஆனது. கடைசி ஓவரில் கடைசி விக்கெட்டுக்கு மூன்று ரன்கள் எடுக்க முடியாமல் இந்திய அணி இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்து போட்டியை டை செய்தது.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பேட்டிங் செய்யும் பொழுது அவருக்கு நடுவர் எல்பிடபிள்யு கொடுத்தார் . ஆனால் பந்து பேட்டில் பட்டதாக கோபம் அடைந்த இந்திய கேப்டன் பேட்டால் ஸ்டம்பை அடித்து வெளியேறினார். இது பெரிய சர்ச்சையானது.

மேலும் போட்டி முடிந்து பேசுகையில், இனி பங்களாதேஷ் வரும்பொழுது நடுவர்களை எப்படி சமாளிப்பது என்றும் நாங்கள் எங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கடுமையாக சாடி இருந்தார். மேலும் புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் பங்களாதேஷ் கேப்டனை நடுவரையும் அழைத்து நிற்க வையுங்கள் உங்களால் அவர் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் பங்களாதேஷ் கேப்டன் புகைப்படம் எடுக்காமல் சென்றது பிரச்சனையானது.

தற்பொழுது இதுகுறித்து பேசி உள்ள பங்களாதேஷ் கேப்டன் நிகர் சுல்தானா
“இது முழுக்க முழுக்க அவர் பிரச்சினை. எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் நல்ல நடத்தையை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். என்ன நடந்தது என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் என் குழு உடன் புகைப்படம் எடுப்பதற்காக நின்று இருந்த பொழுது, அவர் பேசிய விதம் தவறாக இருந்தது எனவே நாங்கள் அங்கிருந்து புகைப்படம் எடுக்காமல் சென்றோம். கிரிக்கெட் என்பது ஒழுக்கம் மற்றும் மரியாதைக்குரிய விளையாட்டு.

அவர் அவுட் ஆகவில்லை என்றால் நடுவர்கள் எதற்காக அவுட் கொடுக்க போகிறார்கள்?! இந்த நடுவர்கள் பங்களாதேஷ் ஆண்கள் கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிக்கு நடுவர்களாக இருந்தவர்கள். இவர்கள் நல்ல நடுவர்கள். இவரது அவுட் தவிர்த்து மீதி தரப்பட்ட அவுட் குறித்து இந்திய கேப்டன் என்ன சொல்லுவார்? நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நடுவரின் தீர்ப்புதான் இறுதியானது இதை ஏற்றுக்கொள்ள வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்.