“ரோகித் சர்மா இப்படித்தான் விளையாடி வருகிறார்.. நான் விளையாடுவதற்கு தயாராகும் விதம் வேறு..!” – சுப்மன் கில் போட்டிக்கு முன்பாக சிறப்பு பேட்டி!

0
278
Gill

தற்பொழுது இந்தியா-பங்களாதேஷ் அணிகள் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மோதிக் கொள்ளும் போட்டி புனே மைதானத்தில் நடைபெற்று வருகிறது!

இந்த போட்டியில் டாஸ் போடப்படுவதற்கு முன்பாக இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் சில முக்கியமான விஷயங்கள் குறித்து பேட்டி அளித்து இருந்தார்.

- Advertisement -

அவருடைய பேட்டியில் அவர் எப்படி போட்டிக்கு தயாராகிறார்? அவருடைய உலகக் கோப்பை அனுபவம் எப்படி இருக்கிறது? ரோஹித் சர்மாவுடன் இணைந்து விளையாடுவது எப்படி இருக்கிறது? என்பது குறித்து விளக்கமாக பேசியிருக்கிறார்.

இதுகுறித்து சுப்மன் கில் பேசும் பொழுது “நான் எனது அடிப்படைகளை செய்வது, வழக்கமாக நான் தயாராவது இருப்பது தான் வெற்றிக்கு முக்கியம். குறிப்பாக போட்டிக்கு தயாராவது நல்ல மனநிலையுடன் இருக்க வேண்டும். நான் இதைத்தான் செய்து வருகிறேன்.

எனது உலக கோப்பை அனுபவம் நன்றாக இருக்கிறது. எனது முதல் போட்டியே பாகிஸ்தான் அணிக்கு எதிராக அமைந்தது. இது எங்களுக்கு ஒரு பெரிய போட்டியாக அமைந்திருந்தது. எங்களிடம் சரியான வேகம் இருக்கிறது. அதை தொடர முடியும் என்று நம்புகிறேன்.

- Advertisement -

ரோகித் சர்மாவுடன் நான் இணைந்து விளையாடும் முறை மாறவில்லை. அவர் ஒரு ஆக்ரோஷமான பேட்ஸ்மேன். உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். அந்த நாளில் அவர் எப்படி உணர்கிறார் என்பதிலிருந்து அவர் விளையாடுகிறார். அவர் உள்ளுணர்வின் படி விளையாடக் கூடியவர்.

புனே இது மிகவும் சிறிய மைதானம். மேலும் இங்கு விக்கெட் விளையாடுவதற்கு நன்றாக இருக்கும் என்று நாம் அனைவரும் அறிவோம். பந்துவீச்சாளர்களை நாங்கள் பாதுகாக்கும் விதமாக நல்ல ரன்கள் பெறுவோம் என்று நம்புகிறேன்.

பெரிய ஸ்கோர்களை பெற வேண்டும் என்றால் மிடில் ஓவர்களில் சிறப்பாக செயல்பட வேண்டியது மிகவும் முக்கியமாகும். நீங்கள் அந்தப் பகுதியில் அதிக விக்கெட்டுகளை இழக்கவில்லை என்றால், உங்களால் பெரிய ஸ்கோர் எடுக்க முடியும்!” என்று கூறியிருக்கிறார்!

இன்று உலகக்கோப்பையில் முதல் முறையாக சுப்மன் கில்லுக்கு அரை சதம் இல்லை சதம் வருமா என்று பார்க்க வேண்டும். மேலும் சச்சின் சாதித்துள்ள ஒரு ஆண்டில் அடித்துள்ள அதிகபட்ச ஓடிஐ ரண்களை எடுக்க அவருக்கு ஒரு வாய்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது