ஐபிஎல்’லில் இது ஒரு காதல் கதை” – சுப்மண் கில் வில்லங்கமான பேட்டி!

0
332

16 வது ஐபிஎல் சீசனில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின . இந்தப் போட்டி பஞ்சாப் மாநிலத்தின் மொஹாலி நகரில் வைத்து நடைபெற்றது . இரண்டு அணிகளும் தங்களது கடைசி போட்டியை தோற்று இருந்ததால் இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற தீர வேண்டிய நெருக்கடியுடன் களமிறங்கினர் .

தாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா பஞ்சாப் அணியை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். குஜராத் அணியின் அபார பந்து வீச்சினால் பஞ்சாப் அணி வீரர்களால் விரைவாக அரன்களை குவிக்க முடியவில்லை. மேலும் இந்த ஆடுகளத்தில் பழைய பந்தில் ரண்களை குறிப்பது பேட்ஸ்மன்களுக்கு மிகவும் சவாலான காரியமாக இருந்தது . இதனைத் தொடர்ந்து பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 153 ரன்களுக்கு எட்டு விக்கெட் இழந்திருந்தது. அந்த அணியின் மேத்யூ ஷார்ட் அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்திருந்தார் .

- Advertisement -

154 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் களம் இறங்கிய குஜராத் அணிக்கு துவக்க வீரர்கள் சுப்மன் கில் மற்றும் சாகா மிகச் சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். சாகா சாய் சுதர்சன் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்ததால் குஜராத் அணி நெருக்கடிக்கு உள்ளானது. ஆயினும் டேவிட் மில்லர் மற்றும் கில் சிறப்பாக ஆடி அணியை வெற்றியின் அருகில் அழைத்துச் சென்றனர்.

இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக ஆடிய கில் இந்த சீசனில் தனது இரண்டாவது அரை சதத்தை பதிவு செய்தார். அவர் 49 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உடன் 67 ரன்கள் எடுத்து இறுதி ஓவரில் ஆட்டம் இழந்தார் . 6 பந்துகளுக்கு ஏழு ரன்கள் எடுக்க வேண்டும் என்று இருந்த குஜராத் அணிக்கு இறுதி 2 பந்துகளில் நான்கு ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் ராகுல் திவாட்டியா சாம் கரண்ட் வீசிய பந்தை எல்லை கோட்டிற்கு விரட்டி குஜராத் அணிக்கு வெற்றியை தேடி தந்தார் .

இது குஜராத் அணி கேசிங்கில் பெரும் பதினோராவது வெற்றியாகும். அந்த அணி பதினோரு முறை வெற்றி பெறும் போதும் டேவிட் மில்லர் எட்டு முறை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்திருக்கிறார் மற்றும் ஆறு முறை ராகுல் திவாட்டியா களத்தில் இருந்திருக்கிறார் . இந்த வெற்றியின் மூலம் புள்ளிகளின் பட்டியலில் குஜராத் அணி 6 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

- Advertisement -

இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடி அரை சதம் எடுத்த சுப்மன் கில் ஆட்டம் முடிந்த பிறகு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசிய அவர் ” ஆட்டத்தின் இரண்டாம் பகுதியில் ஆடுகளம் மிகவும் சவாலானதாக இருக்கிறது. புதிய பந்தில் பேட்டிங் இருக்கு சாதகமாக இருக்கும் ஆடுகளம் போட்டியில் செல்ல செல்ல பழைய பந்தில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாக இருந்தது . அதனால் அதிகபட்சமாக ஒன்று மற்றும் இரண்டு ரன்கள் சேர்க்க முயற்சித்தோம் . இந்த மைதானம் மற்ற ஆடுகளங்களை விட அளவில் பெரியது என்பதால் வீரர்களுக்கு இடையே கேப்புகளில் அடித்து எளிதாக ரண்களை சேர்க்கலாம்” என தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” பஞ்சாப் கிங்ஸ் அணி மற்றும் ராகுல் திவாட்டியா இது ஐபிஎல் இல் காதல் கதை போன்றது. இதற்கு ஒரு முடிவே கிடையாது சென்ற முறையும் அவரது சிறப்பான ஆட்டத்தால் வெற்றி பெற்றோம் இந்த முறையும் கடைசி நேரத்தில் வந்து ஆட்டத்தை முடித்துக் கொடுத்திருக்கிறார் . இது போன்ற போட்டிகளில் பவர் பிளேவை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் . ஆட்டம் செல்லச் செல்ல பேட்டிங் ஆடுவது மிகவும் சிரமமாக இருக்கும் . மேலும் வகித் சர்மா மிகச் சிறப்பாக பந்து வீசினார் . குஜராத் அணிக்காக அவரது தொடக்கம் மிகச் சிறப்பாக இருந்தது என்று கூறி முடித்தார சுப்மன் கில்.