இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியாவில் விளையாடி வருகின்றன.
இதுவரை இந்த தொடரில் நடைபெற்ற மூன்று போட்டிகளில் 2 இந்தியாவும் ஒன்றை ஆஸ்திரேலியாவும் வென்று இருக்கின்றன. நாளைய போட்டியில் இந்தியா வென்றால் தொடரை கைப்பற்றும். ஆஸ்திரேலியா வென்றால் தொடரை சமன் செய்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
இந்த நிலையில் மூன்றாவது போட்டி முடிந்தவுடன் ஆஸ்திரேலியாவின் ஆறு வீரர்களை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் திரும்ப அழைத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு பதிலாக ஆறு இளம் வீரர்களை இந்தியாவிற்கு அனுப்பி வைத்திருக்கிறது.
கடந்த போட்டியில் ருத்ராஜ் சதம் அடித்து இந்தியா 222 ரன்கள் எடுத்த நிலையில், பதிலடியாக மேக்ஸ்வெல் திரும்ப அதிரடியாக சதம் அடித்து இந்தியாவை ஆஸ்திரேலியா வென்றது. இதனால் ஆஸ்திரேலியா அணியின் தற்போதைய தன்னம்பிக்கை அதிகரித்து இருக்கிறது.
முன்னணி வீரர்கள் பெரிய அளவில் இல்லாமல் இந்த தொடரை ஆஸ்திரேலிய அணி வெல்லும் என்றால் அது இந்திய அணிக்கு மேலும் பின்னடைவாக மாறும். ஏற்கனவே உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்துவீச்சாளர் பெஹரேன்டோர்ப் கூறும்பொழுது “குறிப்பாக இந்தியா போன்ற அணிக்கு எதிராக அதன் சொந்த நாட்டில் விளையாடும் பொழுது, நாம் எப்பொழுதும் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். கடந்த போட்டியில் நாங்கள் 222 ரன்களை துரத்திய விதம், எங்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. இதை நாங்கள் முன்னோக்கி எடுத்துச் செல்வோம்.
இந்திய அணி தாக்குதல் பாணியில் விளையாடுவது எங்களுக்கு கடினமானதுதான். இதன் மூலம் அவர்களது விக்கெட்டை கைப்பற்ற எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. நாங்கள் எங்களுடைய சரியான இடங்களில் ஃபீல்டர்களை வைப்போம் என்று நம்புகிறோம். நாங்கள் எங்கள் திட்டத்தின் மூலமாக அவர்களை முறியடிப்போம்.
தற்போதைய எங்களது வீரர்கள் சர்வதேச அளவில் பெரிய அனுபவம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள்தான், ஆனால் அவர்கள் ஆஸ்திரேலியா மட்டுமில்லாமல் உலகெங்கும் டி20 கிரிக்கெட் லீக் விளையாடியவர்கள். எனவே நாங்கள் தொடரை நல்லபடியாக விளையாடி வெல்வோம்!” என்று கூறி இருக்கிறார்!