“எங்க நாட்டுல இந்த இந்திய இளம் வீரர் நல்லா விளையாட முடியும்!” – ஏபி டிவில்லியர்ஸ் ஆச்சரியமான பேச்சு!

0
911
ICT

இந்திய கிரிக்கெட்டில் சமீபத்தில் சில சூறாவளிகளை ஏற்படுத்திய ஆண்டாக 2021ஆம் ஆண்டின் இறுதி நேரம் இருந்தது.

இந்த ஆண்டில்தான் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணி முதல் சுற்றுவுடன் தோற்று வெளியேறி வந்தது. ரவி சாஸ்திரி பயிற்சி காலம் முடிந்த அதேவேளையில் விராட் கோலி டி 20 கேப்டன் பொறுப்பில் இருந்து வெளியேறினார்.

- Advertisement -

மேலும் இதே ஆண்டில் இறுதியில் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணி, விராட் கோலி தலைமையில் டெஸ்ட் தொடரை இழந்தது. விராட் கோலி இந்திய டெஸ்ட் கேப்டன் பொறுப்பையும் துறந்தார். இதை ஒட்டி நிறைய சர்ச்சைகளும் விமர்சனங்களும் இந்திய கிரிக்கெட்டை அப்பொழுது சூழ்ந்திருந்தன.

இந்த நிலையில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு தற்பொழுது இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாட இந்த மாதம் செல்கிறது. இதற்கான அணி அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.

மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் நிறைய ஆச்சரியமான பெயர்கள் இடம் பெற்றுள்ளன. சிலருக்கு அவர்கள் எதிர்பார்க்காத வடிவத்தில் இடம் கிடைத்திருக்கிறது. சிலருக்கு அவர்கள் எதிர்பார்க்கும் வடிவத்திற்கு இடம் கிடைக்கவில்லை.

- Advertisement -

இதில் மிகக் குறிப்பாக தமிழகத்தின் சாய் சுதர்சன் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். மேலும் இதே ஒருநாள் கிரிக்கெட் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் சாகல் இருவரும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இதுகுறித்து ஏபி.டிவில்லியர்ஸ் கூறும்பொழுது “சஞ்சு சாம்சனை இந்திய அணியில் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் தென் ஆப்பிரிக்க ஆடுகளங்களை ரசித்து விளையாடுவார் என்று நினைக்கிறேன். அவர் பேட்டிங் செய்யும்பொழுது நிமிர்ந்து நிற்கக் கூடியவர். எங்கள் ஆடுகளங்களில் பவுன்ஸ் மற்றும் வேகம் நன்றாக இருக்கும். இதன் மூலம் பேட்டர்கள் சோதிக்கப்படுவார்கள்.

ஆனாலும் கூட சஞ்சு போன்ற ஒருவர் எங்கள் நாட்டில் சிறப்பாக செயல்பட முடியும் என்று நான் நினைக்கிறேன். மேலும் அவர் உங்களுக்கு விக்கெட் கீப்பராகவும் இருப்பது கூடுதல் சிறப்பு!” என்று கூறியிருக்கிறார்!