எனக்கு அடிக்கடி நடக்காத விஷயம் இன்னைக்கு நடந்தது.. எல்லாமே கடவுளின் கருணை – ஹர்திக் பாண்டியா பேட்டி

0
70
Hardik

இன்று டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராக அமெரிக்கா நியூயார்க் நாசாவ் மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவது என அறிவித்தார். அமெரிக்க கண்டிஷன் வந்து நன்றாக ஸ்விங் ஆவதற்கு பெரிய அளவில் உதவி செய்வது இந்த போட்டியிலும் தொடர்ந்தது.

- Advertisement -

இந்திய அணியில் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அயர்லாந்து பேட்ஸ்மேன்கள் போராடினார்கள். அயர்லாந்து அணியின் முதல் இரண்டு விக்கெட்டுகளை அர்ஸ்தீப் சிங் கைப்பற்றி அயர்லாந்து அணியில் சரிவை முதலில் ஆரம்பித்து வைத்தார்.

இதற்கு அடுத்து பந்துவீச்சுக்கு வந்த ஹர்திக் பாண்டியா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அயர்லாந்து அணி 96 ரன்களுக்கு சுருளுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். இன்று அவரது மூன்று விக்கெட்டில் முதல் விக்கெட்டை கிளீன் போல்ட் மூலம் வீழ்த்தினார். மேலும் இன்றைய போட்டியில் நான்கு ஓவர்கள் பந்துவீசி 27 ரன் மட்டும் தந்து மூன்று விக்கெட் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து ஆட்டத்தின் முதல் பகுதிக்கு பிறகு பேசிய ஹர்திக் பாண்டியா “நாட்டிற்காக விளையாடுவதும் பெருமைக்காக விளையாடுவதும் எப்போதும் சிறந்த ஒரு விஷயம். உலகக் கோப்பைகளில் என்னால் பங்களிக்க முடிந்தது மிகவும் மகிழ்ச்சி. இது கடவுள் காட்டிய கருணை. இன்று நான் எனது முதல் விக்கெட்டை மிகவும் விரும்பினேன்.

இதையும் படிங்க : 16 ஓவர்.. ஹர்திக் பாண்டியா பும்ரா ஸ்பெஷல் சாதனை.. அயர்லாந்தை இந்திய அணி சுருட்டியது

ஏனென்றால் நான் முதல் விக்கெட்டை கிளீன் போல்ட் மூலம்வீழ்த்தி இருந்தேன். நான் பெரும்பாலும் ஷார்ட் பந்துகள் வீசுகின்ற காரணத்தினால், என்னால் இப்படி கிளீன் போல்ட் மூலம் விக்கெட் எடுக்க முடியாது. ஆனால் இன்றைய சூழ்நிலைக்கு கொஞ்சம் மேலே வீச நான் முடிவு செய்தேன். இதனால் எனக்கு விக்கெட் கிடைத்தது. சூழ்நிலைகளுக்கு சரியான இடங்களில் பந்தை அடிக்க வேண்டும். இந்தியர்கள் உலகில் எல்லா இடங்களிலும் இருக்கிறோம். இந்திய ரசிகர்களின் ஆதரவை பெறுவது நல்ல விஷயம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -