வெறும் 12 ஓவர்.. ரோகித் யாரும் செய்யாத சாதனை.. இந்திய அணி அயர்லாந்தை அனாயசமாக வீழ்த்தியது

0
681
Rohit

நடப்பு ஐசிசி ஒன்பதாவது டி20 உலக கோப்பை தொடரில் அமெரிக்கா நியூயார்க் நாசாவ் கவுன்டி சர்வதேச மைதானத்தில் இந்திய அணி அயர்லாந்து அணிக்கு எதிராக முதல் போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் சிறப்பான பந்துவீச்சின் காரணமாக இந்திய அணி எளிதான வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசியது. ஏற்கனவே பங்களாதேஷ் அணிக்கு எதிராக பயிற்சி போட்டியில் விளையாடிய அதே மைதானம் அதே ஆடுகளத்தில் இந்திய அணி விளையாடியதால் எல்லாமே பங்குவீச்சுக்கு சாதகமாகவே அமைந்திருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் அயர்லாந்து அணி கொத்துக்கொத்தாக விக்கெட்டுகளை கொடுத்தது. இதைத்தொடர்ந்து அந்த அணி 50 ரன்கள் 8 விக்கெட்டுகளை கொடுத்து விட்டது. எனவே சர்வதேச டி20 கிரிக்கெட்டின் குறைந்தபட்ச தங்களுடைய ஸ்கோருக்கு ஆட்டம் விளக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் அயர்லாந்து அணியின் டெலனி 16 பந்தில் 26 ரன்கள் எடுத்தார். 16 ஓவர்களில் அயர்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. இந்திய அணியின் பந்து வீச்சு தரப்பில் ஹர்திக் பாண்டியா மூன்று விக்கெட்டுகள், பும்ரா மற்றும் அர்ஸ்தீப் சிங் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதையும் படிங்க : எனக்கு அடிக்கடி நடக்காத விஷயம் இன்னைக்கு நடந்தது.. எல்லாமே கடவுளின் கருணை – ஹர்திக் பாண்டியா பேட்டி

- Advertisement -

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா துவக்க ஆட்டக்காரர்களாக வந்தார்கள். விராட் கோலி 5 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து ரிஷப் பண்ட் மூன்றாவது வீரராக அனுப்பி வைக்கப்பட்டார்.