ஐந்து மாசம்தான் ஆகுது.. பாகிஸ்தான் போட்டிக்கு இந்த விஷயத்துல என்ன செய்யறதுனு தெரியல – ரோகித் சர்மா பேச்சு

0
166
Rohit

இன்று டி20 உலகக்கோப்பை தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டி புதிய மைதானமான அமெரிக்க நியூயார்க் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் அயர்லாந்து அணி 96 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் தரப்பில் ஹர்திக் பாண்டியா 27 ரன்கள் தந்து மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா 36 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து தோள்பட்டை காயம் காரணமாக வெளியேறினார். இதற்கு அடுத்து ரிஷப் பண்ட் 26 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 36 ரன்கள் எடுத்து 12.2 ஓவரில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.

வெற்றிக்குப் பின் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறும் பொழுது ” இந்த ஆடுகளத்தில் இருந்து என்ன எதிர்பார்ப்பது என்று தெரியவில்லை. இந்த ஆடுகளம் தயாரிக்கப்பட்டு வெறும் ஐந்து மாதங்கள்தான் ஆகிறது. எனவே எப்படி விளையாடுவது என்று தெரியவில்லை. நாங்கள் பேட் செய்த பொழுதும் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக மாறவில்லை.

- Advertisement -

இங்கு பந்துவீச்சாளர்களுக்கு உதவி இருக்கிறது. நாம் தொடர்ந்து சரியான லென்த்தில் அடிக்க வேண்டும். இந்திய அணியில் நிறைய பந்துவீச்சாளர்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியதால் அவர்களுக்கு தெரியும். மேலும் இந்த மைதானத்தில் நான்கு சுழல் பந்துவீச்சாளர்களை வைத்துக் கொண்டு எல்லாம் விளையாட முடியாது. சூழ்நிலை வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கிறது. எனவே அதற்கு தகுந்தபடி நாங்கள் அணியை தேர்வு செய்தோம்.

இதையும் படிங்க : வெறும் 12 ஓவர்.. ரோகித் யாரும் செய்யாத சாதனை.. இந்திய அணி அயர்லாந்தை அனாயசமாக வீழ்த்தியது

உண்மையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக என்ன செய்வது என்று தெரியவில்லை. இந்த ஆடுகளத்தில் என்ன பெற முடியும் என்பது குறித்தும் தெரியவில்லை. நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திற்கு தயாராகும். மேலும் இந்த ஆடுகளத்தில் கொஞ்சம் நேரம் செலவு செய்து எப்படி விளையாடுவது? என்று புரிந்து கொள்வது நல்லது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -