“இதுவரை இருந்ததில் இந்தத் இந்திய டீம்தான் பெஸ்ட்.. ஆனா செமி பைனலில் மும்பையில்..!” – தினேஷ் கார்த்திக் கருத்து!

0
3013
DK

நடப்பு உலகக்கோப்பையில் இந்திய அணி எட்டு லீக் போட்டிகளை விளையாடி எட்டுப் போட்டிகளையும் வென்று அசத்தியிருக்கிறது.

ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொண்டால் இந்திய அணியில் மூன்று துறைகளிலும் வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்படுகிறார்கள்.

- Advertisement -

இந்திய அணியில் காயத்தில் இருந்த முன்னணி வீரர்கள் எல்லோரும் திரும்பி ஒரே அணியாக ஒன்று சேர்ந்த பிறகு, இந்திய அணி மிகப்பெரிய பலம் கொண்ட அணியாக உருவெடுத்திருக்கிறது.

ஒருநாள் கிரிக்கெட்டை பேட்டிங் என்று எடுத்துக் கொண்டால் மூன்று பகுதிகளிலும் சிறப்பாக விளையாடக்கூடிய பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். பந்துவீச்சிற்கு வேகபந்துவீச்சு மற்றும் சுழற் பந்துவீச்சு என ஐந்து உலக தரமான பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்.

ஒருநாள் கிரிக்கெட் ஐசிசி தரவரிசையில் ஒட்டுமொத்தமாக சேர்த்து இந்திய அணியில் விளையாடும் 11 வீரர்களில் எட்டு வீரர்கள் முதல் 10 இடங்களுக்குள் இருக்கிறார்கள். இதில் பாதிக்கும் மேற்பட்ட வீரர்கள் முதல் இடத்தை பிடித்திருக்கிறார்கள் என்பதுதான் சிறப்பான விஷயம்.

- Advertisement -

இந்த வகையில் இந்திய அணி மிக பலமாக இருக்கிறது. மேலும் அரை இறுதியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து மும்பையில் விளையாட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “ஒருநாள் போட்டிகளில் அமைந்த இந்திய அணிகளில் இந்த அணியே மிக பலம் வாய்ந்த அணியாக இருக்கிறது. மேலும் இந்த உலகக் கோப்பையில் விளையாடும் இந்திய அணி போல எந்த உலகக் கோப்பையில் இருந்த இந்திய அணியும் கிடையாது.

இதுவரை அமைந்து வந்த மற்ற இந்திய அணிகள் மற்றும் உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட வேறு நாட்டு அணிகள் என்று எடுத்துக் கொண்டால், இந்த அணி எல்லாவற்றுக்கும் சமமாக அல்லது அதைவிட பலமானதாகத் தான் இருக்கும்.

மும்பையில் நியூசிலாந்துக்கு எதிராக டாஸ் வென்றால் இந்திய அணி என்ன முடிவு செய்யும் என்பதுதான் இதில் பெரிய விஷயம். ஏனென்றால் முதலில் பேட்டிங் செய்தால் இரண்டாவது பகுதியில் பந்து வீச பனிப்பொழிவு வரும். இரண்டாவது பேட்டிங் செய்தால் ஆரம்பத்தில் பந்து நன்றாக ஸ்விங் சீம் ஆகும். எனவே டாஸ் பற்றி முடிவு எடுக்க வேண்டியது தான் முக்கியமானதாக இருக்கும். எப்படியும் இதுவரை விளையாடிய அணிதான் களமிறங்கும் என்பதில் சந்தேகம் இல்லை!” என்று கூறியிருக்கிறார்!