இந்த ஒரு இந்திய வீரர் நடைபெறவிருக்கும் ஐசிசி உலகக் கோப்பை டி20 தொடரில் கேம் சேஞ்சராக இருக்கப் போகிறார் – சுனில் கவாஸ்கர் நம்பிக்கை

0
64

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் ஐசிசி உலக கோப்பை டி20 தொடரில் ஒரு இந்திய ஆல்ரவுண்டர் வீரர் கேம் சேஞ்சராக இருக்க போகிறார் என்று கூறியுள்ளார். ஆட்டத்தின் போக்கை மாற்றும் அளவுக்கு அவர் விளையாட போவதாகவும் அந்த ஆற்றல் அவருக்கு உள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ள அந்த இந்திய வீரர்

- Advertisement -

சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் தற்போது இடம் பிடித்திருக்கும் ஹர்திக் பாண்டியாவையே சுனில் கவாஸ்கர் பாராட்டிப் பேசியுள்ளார்.

“ஐசிசி உலக கோப்பை டி20 தொடரில் மட்டுமல்லாமல் இனி நடைபெற இருக்கும் டி20 போட்டிகளிலும் அவர் முக்கிய வீரராக விளையாட போகிறார். பேட்ஸ்மேனாக ஐந்தாவது இடத்தில் களம் இறங்கி விளையாடுவார். அதேசமயம் பந்துவீச்சில் தேவைப்படும் நேரத்தில் சிறப்பாக பந்துவீசி திருப்புமுனையை ஏற்படுத்துவார். புதிய பந்தை பயன்படுத்தி அவர் சிறப்பாக பந்து வீசுவார் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. கூடிய விரைவில் புதிய பந்தில் அவர் பந்து வீசுவதை நான் பார்க்க வேண்டும்” என்றும் தனது ஆசையை கவாஸ்கர் நம்மிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

சுனில் கவாஸ்கர் கூறியது வழிமொழிந்து தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் ஒரு சில விஷயங்களில் கூறியுள்ளார். ஹர்திக் பாண்டியாவை பேட்ஸ்மேனாக மட்டும் பார்க்க முடியாது. அவர் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் வீரர். ஆல்ரவுண்டர் வீரராக பயன்படுத்தும் பட்சத்தில் இந்திய அணியின் பலம் மேலும் அதிகரிக்கும். பவுலிங்கில் நிறைய ஆப்ஷன்கள் இந்திய அணிக்கு கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ள ஹர்திக் பாண்டியா

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி கோப்பையை வென்றது. 15 ஆட்டங்களில் சராசரியாக 44.27 மற்றும் 131.27 ஸ்ட்ரைக் ரேட்டில் 487 ரன்கள் குவித்திருக்கிறார். அதேபோல பந்துவீச்சில் 8 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியிருக்கிறார். வீரராக மட்டுமின்றி கேப்டனாகவும் அவர் சிறப்பாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஐசிசி உலக கோப்பை டி20 தொடரில் கடைசியாக இந்திய அணியில் விளையாடிய அவர் மீண்டும் தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று கொண்டிருக்கும் டி20 தொடரில் விளையாடி வருகிறார்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் 12 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார். அதுமட்டுமின்றி பவுலிங்கில் ஒரு ஓவர் வீசி 18 ரன்கள் விட்டுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.