“இந்தப் பையன் எனக்கு குத்துச்சண்டை வீரர் முகமது அலி மாதிரி!” – 2 உலக கோப்பை வென்ற இந்திய வீரர் பேச்சு!

0
91
ICT

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் அடுத்த வருடம் 2024-ல் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த முறை இந்த உலகக் கோப்பை தொடரில் 20 அணிகள் நேரடியாகப் பங்கு பெறுகின்றன. மொத்தம் நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டு இரண்டு சுற்றுகளாக போட்டி நடைபெறுகிறது.

உலகக் கோப்பை தொடரில் கலந்துகொள்ள இருக்கும் 20 அணிகளும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்ட காரணத்தினால், ஒவ்வொரு அணிகளும் டி20 உலக கோப்பையை நோக்கி தங்களது தயாரிப்பு திட்டங்களை உருவாக்கி வருகின்றன.

- Advertisement -

இந்திய அணியை பொறுத்தவரை மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் விளையாடுவார்களா இல்லை வெளியேறுவார்களா என்பது சந்தேகமாக இருந்து வருகிறது. இதனால் டி20 உலகக் கோப்பை இந்திய அணி நிர்வாகத்தின் தயாரிப்புகளில் பின்னடைவு தற்போது ஏற்பட்டு இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் இந்தியாவில் இரண்டு மாதம் டி20 கிரிக்கெட் வடிவத்தில் ஐபிஎல் தொடர் நடக்க இருக்கின்ற காரணத்தினால், இந்தத் தொடரை முன்வைத்து டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணியை தேர்வு செய்கின்ற உத்தேசத்தில் இருப்பதாக தெரிகிறது. எனவே மூத்த மற்றும் இளம் வீரர்கள் என இந்திய வீரர்களுக்கு இந்த ஐபிஎல் முக்கியமானது.

அதே சமயத்தில் தற்பொழுது இந்திய டி20 அணியில் இளம் வீரர்களாக ஜெய்ஸ்வால், ருத்ராஜ், இஷான் கிஷான், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா, ரிங்கு சிங் என ஆறு வீரர்கள் பேட்டிங் யூனிட்டில் அதிரடியாக இடம் பிடித்து வருகிறார்கள்.

- Advertisement -

இந்த ஆறு வீரர்களில் இதுவரை டி20 உலக கோப்பைக்கு உறுதி செய்யப்பட்ட ஒரு வீரராக தெரிபவர் மட்டுமே. பினிஷிங் என்ற கடினமான இடத்தில் பேட்டிங் யூனிட்டில் இடம்பெறுகின்ற ரிங்கு சிங், ஐபிஎல் மற்றும் இந்திய அணியில் அந்த வேலையை மிக எளிதாகவும் சரியாகவும் செய்து வருகிறார். அவர் கொண்டிருக்கும் அமைதியும் அவருடைய ஷாட் செலக்ஷன் மிகச் சிறப்பாக இருந்து வருகிறது.

இதுகுறித்து இரண்டு உலகக் கோப்பைகளை வென்ற இந்திய அணிகள் இடம்பெற்று இருந்த இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் கூறும் பொழுது “ரிங்கு சிங்கின் தன்னம்பிக்கை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்தான் இடம்பெறும் எந்த அணியாக இருந்தாலும், உள்நாட்டு மற்றும் ஐபிஎல், சர்வதேச இந்திய அணியினர் மிகச் சிறப்பாக சரியாக செயல்பட்டு வருகிறார்.

அவர் எது குறித்தும் கவலைப்படுவதில்லை. அவர் ஆட்டத்தை அழகாக எடுத்துச் சென்று முடிக்கிறார். அவர் அமைதியாக இருக்கிறார் மேலும் அவர் செயல்தான் பேசுகிறது. என்னை பொறுத்தவரை அவர் எனக்கு குத்துச்சண்டை வீரர் முகமது அலி போன்றவர்!” என்று கூறி இருக்கிறார்!