“ஜமான் பேட்டிங்க்கு இந்த கிரவுண்ட் ரொம்ப சின்னது.. 401ரன் அடிச்சு தோக்கிறது கஷ்டம்!” – வில்லியம்சன் அசத்தலான பேச்சு!

0
1160
Williamson

இன்று உலகக்கோப்பை தொடரில் மிகவும் பரபரப்பான போட்டி ஒன்றில் மழையோடு சேர்ந்து நியூசிலாந்து அணியை பாகிஸ்தான் அணி வென்றிருக்கிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி ரச்சின் ரவீந்திரா 108 மற்றும் கேன் வில்லியம்சன் 95 ரன்கள் எடுக்க, 50 ஓவர்களில் 41 ரன்கள் குவித்து அசத்தியது.

- Advertisement -

இதற்கு அடுத்து பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய வந்து அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் பகார் ஜமான் அதிரடியாக 63 பந்துகளில் சதம் அடித்தார். அவருக்கு கேப்டன் பாபர் அசாம் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்.

நியூசிலாந்து அணியில் காயத்தின் காரணமாக முக்கிய பந்துவீச்சாளர்கள் இடம்பெற முடியாமல் போக, இந்த ஜோடியை தடுக்க கேப்டன் கேன் வில்லியம்ஸனால் முடியவில்லை.

இன்னொரு பக்கம் மழை விரட்டி கொண்டிருக்க, அதற்கேற்ற வகையில் பாகிஸ்தான் ரன்களை ஒருபுறமாக குவித்து கொண்டிருந்தது. இறுதியில் 25 ஓவர்களில் பாகிஸ்தான் 200 ரன்கள் ஒரு விக்கெட் இழப்புக்கு எடுத்திருந்தபோது மழை முழுவதுமாக வந்தது.

- Advertisement -

இந்த நிலையில் விதிப்படி பாகிஸ்தான் அணி 21 ரன்கள் முன்னணியில் இருந்தது. குறிப்பிட்ட நேரத்திற்குள் தொடர்ந்து மழை நிற்காத காரணத்தினால் பாகிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் தற்பொழுது இந்தியா தவிர எந்த அணியும் அரை இறுதிக்கு முன்னேறவில்லை.

போட்டி முடிவுக்கு பின் பேசிய கேப்டன் கேன் வில்லியம்சன் “இவ்வளவு பெரிய ரன்கள் எடுத்தும் தோற்கின்ற பொழுது அது கடினமானது. எங்களைப் பொறுத்தவரை அடுத்த ஆட்டத்திற்கு என்ன தேவையோ அந்த நேர்மறைகளை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

பாகிஸ்தான் அணி விதிவிலக்காக அவர்களுக்கு என்ன தேவையோ அந்த வாய்ப்புகளை எல்லாம் கொடுத்து விளையாடி இந்த வெற்றியை பெற்றிருக்கிறார்கள். அவர்கள் நிச்சயமாக எவ்வளவு ரன்கள் தேவையோ விதிப்படி அவ்வளவு ரன்களை தொடர்ந்து எடுத்தார்கள்.

ஜமான் அழகாக விளையாடினார். அவர் விளையாடுவதற்கு இந்த கிரவுண்ட் மிகவும் சின்னது. பாகிஸ்தான் இந்த வெற்றிக்கு தகுதியான அணி. இந்த ஆடுகளத்தில் இந்த சூழ்நிலைக்கு 450 ரன்கள் தேவையாக இருக்குமோ என்னமோ தெரியவில்லை.

நேர்மறையாக எங்கள் பக்கத்தில் சில நல்ல பார்ட்னர்ஷிப்புகள் இருந்தது. இது பேட்டிங் செய்ய நல்ல ஆடுகளம். இங்கு பந்துவீச்சாளர்களுக்கு வேலை மிகவும் கடினமானது.

எங்கள் அணியில் ரச்சின் மிக அழகாக பேட்டிங் செய்தார். இது மேலும் தொடரும் என்று நம்புகிறேன். எங்கள் யூனிட்டில் இது நல்ல பாசிட்டிவான அறிகுறிகள். நாங்கள் பாகிஸ்தானின் இடது வலது கை பேட்டிங் கூட்டணியை முறியடித்து இருந்தால் ஒரு வேலை முடிவுகள் மாறி இருக்கலாம்!” என்று கூறி இருக்கிறார்!