தமிழ் பையன் வாஷிங்டன் சுந்தர் vs நியூசிலாந்து போட்டின்னு சொல்ற அளவுக்கு ஒத்த ஆளாக போராடினான் – ஹர்திக் பாண்டியா புகழாரம்!

0
1232

இந்த போட்டி நியூசிலாந்து மற்றும் வாஷிங்டன் சுந்தருக்கு எதிரான போட்டியாக அமைந்தது, அவ்வளவு சிறப்பாக செயல்பட்டார் என பேசியுள்ளார் ஹர்திக் பாண்டியா.

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் இந்தியா பவுலிங் செய்தது. பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 176 ரன்கள் அடித்தது.

- Advertisement -

19 ஓவர் வரை நியூசிலாந்து அணி 149 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. அர்ஷதீப் சிங் வீசிய கடைசி ஓவரில் டெரல் மிட்ச்சல் 27 ரன்கள் விளாசியதால், 176 ரன்களை நியூசிலாந்து எட்டியது. டேரல் மிட்ச்சல் 30 பந்துகளில் 59 ரன்கள் அடித்திருந்தார். அபாரமாக பந்தவீசிய வாஷிங்டன் சுந்தர் 4 ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதை தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 15 ரன்களுக்கு மூன்று விக்கெடுகளை இழந்தபின், சூரியகுமார் யாதவ் 47 ரன்களும், பாண்டியா 21 ரன்களும் அடித்து போராடி ஆட்டமிழந்தனர்.

இறுதிவரை போராடிய வாஷிங்டன் சுந்தர் 28 பந்துகளில் 50 ரன்கள் அடிதது ஆட்டம் இழந்தார். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்த இந்திய அணி, 21 ரன்கள் வித்தியாசத்தில் சந்தித்தது.

- Advertisement -

பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் அபாரமாக செயல்பட்ட வாஷிங்டன் சுந்தர் பற்றி போட்டி முடிந்தபிறகு பேசிய ஹர்திக் பாண்டியா புகழ்ந்துள்ளார். அவர் பேசியதாவது:

“இந்த போட்டி முழுக்க முழுக்க நியூசிலாந்து மற்றும் வாஷிங்டன் சுந்தருக்கு எதிரான போட்டியாக அமைந்தது. அந்த அளவிற்க்கு சுந்தர் சிறப்பாக செயல்பட்டார். அணியில் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் பங்களிக்கக்கூடிய வீரர்கள் இருந்தாலே, அது மிகப்பெரிய நம்பிக்கையை கொடுக்கும். பல போட்டிகளில் வென்று முன்னேறி செல்வதற்கு உதவும் என்றார்.”