“இந்திய அணிக்கு இப்ப மேட்ச் வின்னர் இந்த பேட்ஸ்மேன்தான்” – ஏபி டிவில்லியர்ஸ் ஆச்சரியமான கணிப்பு

0
218
ICT

தற்போது இந்திய அணியின் பேட்டிங் யூனிட்டில் டி20 கிரிக்கெட் பொருத்தவரையில் மூத்த வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவர் மட்டுமே இருக்கிறார்கள்.

கடந்த 14 மாதங்களாக இவர்களும் இந்திய டி20 அணிக்கு தேர்வு செய்யப்படாமல் இருந்தார்கள். மாறிவரும் கிரிக்கெட்டில் டி20 கிரிக்கெட்டுக்கான வரவேற்பு ரசிகர்களிடையே மிக அதிகமாக இருந்து வருகிறது.

- Advertisement -

இதன் காரணமாக ஒவ்வொரு கிரிக்கெட் நாடுகளும் டி20 கிரிக்கெட்டில் சிறந்த அணியை உருவாக்குவதில் பெரிய கவனத்தை செலுத்தி வருகிறார்கள். குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற பெரிய கிரிக்கெட் நாடுகள் இதில் கவனம் செலுத்துகின்றன.

அதே சமயத்தில் இன்னொரு கிரிக்கெட்டில் பெரிய நாடான இந்தியா டி20 கிரிக்கெட்டில் எப்பொழுதும் பின்தங்கியே இருந்தது. டி20 கிரிக்கெட்கான வேகம் மற்றும் இன்டெண்ட் இந்திய அணியிடம் இல்லை.

இந்த காரணத்தினால் அதிரடியான முறையில் பேட்டிங் யூனிட்டை அமைத்து அச்சம் இல்லாமல் விளையாட செய்வதற்காக இளம் வீரர்களை கொண்ட பேட்டிங் யூனிட் உருவாக்கப்பட்டது.

- Advertisement -

இந்த புதிய முயற்சியில் இறுதியாக இந்திய டி20 அணியில் வாய்ப்பு பெற்றவர் உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான இளம் இடதுகை பேட்ஸ்மேன் ரிங்கு சிங்.

ஆட்டத்தின் போக்கை உடனடியாக உணர்வது, எந்த இடத்திலும் அழுத்தங்களுக்கு சாயாமல் இருப்பது, விக்கெட்டை பிடிவாதமாக பிடித்து விளையாடுவது, சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாடுவதில், அதிரடியாக விளையாட வேண்டும் என்றால் உச்சபட்ச அதிரடியில் விளையாடுவது என, டி20 கிரிக்கெட் தாண்டி கிரிக்கெட்டுக்கு அளவெடுத்து உருவாக்கப்பட்டவர் போல ரிங்கு சிங் இருக்கிறார். இவரது இடம் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் உறுதியாக இருக்கிறது என்றும் கூறலாம்.

இவர் குறித்து பேசி உள்ள ஏபி டிவில்லியர்ஸ் கூறும் பொழுது ” ரிங்கு ஒரு அற்புதமான வீரர். அவர் நிலையாக ரன்கள் எடுப்பதை பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் இந்திய அணிக்கு மேட்ச் வின்னர். நீங்கள் நிலையான ஒரு வீரராக மாறும்பொழுது அணிக்கு ஆட்டத்தை வென்று கொடுக்க வேண்டியது முக்கியம்” என்று கூறியிருக்கிறார்.