“ஆஸி வீரர் சொன்ன இந்த மோசமான வார்த்தைதான் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு காரணம்” – கேப்டன் பிராத்வயிட் பேச்சு

0
867
AUSvsWI

27 வருடங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியா மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியை வென்று சாதித்திருக்கிறது வெஸ்ட் இண்டீஸ் அணி.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியை ஆஸ்திரேலியா வென்று இருக்க இரண்டாவது போட்டியை 8 ரன்கள் வித்தியாசத்தில் பரபரப்பான முறையில் வெஸ்ட் இண்டீஸ் வென்று தொடரை சமன் செய்திருக்கிறது.

- Advertisement -

இந்தத் தொடரில் கையில் மேயர் மற்றும் ஜேசன் ஹோல்டர் போன்ற முன்னணி வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் வருவதற்கு சம்மதிக்கவில்லை. அவர்கள் வெளிநாடுகளில் நடக்கும் டி20 லீக்குகளில் விளையாட பறந்து விட்டார்கள்.

இப்படியான நிலையில் பிராத்வயிட் தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட வெஸ்ட் இண்டிஸ் அணி வந்து சாதித்திருக்கிறது. 216 ரன்கள் என்கின்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா 207 ரன்கள் மட்டும் எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

வெற்றிக்குப் பின் பேசிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கூறும் பொழுது “நாங்கள் கடைசியாக ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை வென்று விட்டோம். இது மிகவும் அர்த்தமுள்ள வெற்றி. இது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்கு நிறைய நல்லது செய்யப் போகிறது. நாங்கள் இங்கு ஒரு டெஸ்ட் போட்டியை வென்று பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் நான் என் குழுவிற்கு சொல்லும் செய்தி இதுதான், இது ஆரம்பம்தான் இது தொடரப்போகிறது.நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

- Advertisement -

ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ரோட்னி ஹாக் கூறிய இரண்டு வார்த்தைகள்தான் எங்களை நல்ல உத்வேகப்படுத்தியது. அவர் எங்களை பரிதாபகரமான நம்பிக்கையற்றவர்கள் என்று கூறினார். இப்பொழுது நாங்கள் எங்களை உலகத்திற்கு நிரூபித்து விட்டோம். இந்த மசல்ஸ் போதுமா? ( கையை மடக்கி காட்டுகிறார்)

இதையும் படிங்க : 27 வருட ஏக்கம்.. புதிய வரலாறு.. ஆஸியை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்.. திரில் போட்டியில் மாஸ் வெற்றி

விளையாடும் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக காயம் பட்டிருந்த ஷாமார் ஜோசப் ஊசி போட்டுக் கொண்டார். அவர் நிச்சயம் சாதிப்பார் என்று எனக்கு தெரியும். அவர் ஒரு சூப்பர் ஸ்டார். அவர் எதிர்காலத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக நிறைய வெற்றிகளை பெறப் போகிறார். நான் தொடர்ச்சியாக நிறைய டெஸ்ட் போட்டிகள் விளையாடுவேன்” என்று கூறியிருக்கிறார்.