ஆர்சிபி வீரர்களிடம் கை குலுக்காமல் திடீரென வெளியேறிய தோனி.. காரணம் என்ன.. களத்தில் என்ன நடந்தது?

0
2831
Dhoni

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையே பரபரப்பான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஆர்சிபி அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. போட்டி முடிவில் தோனி ஆர்சிபி வீரர்களிடம் கைகுலுக்காமல் சென்ற சம்பவம் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.

நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரின் முதல் பந்தை சிக்ஸருக்கு அடித்து, சிஎஸ்கே அணிக்கான பிளே ஆப் வாய்ப்பை தோனி பெரிய அளவில் உறுதி செய்தார். இதன் காரணமாக மைதானத்தில் ரசிகர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் அடுத்த பந்தில் தோனி எதிர்பாராத விதமாக ஆட்டம் இழக்க, மேற்கொண்டு சிஎஸ்கே அணியால் 5 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து வெற்றி பெற முடியவில்லை. இதையடுத்து போட்டியை வென்றது மட்டும் இல்லாமல், சிஎஸ்கே அணியை 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி பிளே ஆப் வாய்ப்பையும் ஆர்சிபி அணி வென்றது.

இந்தப் போட்டி மகேந்திர சிங் தோனிக்கு அவருடைய கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. நேற்று அவர் நின்று வழக்கம் போல் போட்டியை முடித்துக் கொடுத்திருந்தால், அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மிகச் சிறப்பான முடிவாக அது அமைந்திருக்கும். ஆனால் துரதிஷ்டவசமாக அது முடியவில்லை.

இந்த நிலையில் போட்டிக்கு பின் ஆர்சிபி வீரர்களிடம் கை கொடுக்குவதற்காக சிஎஸ்கே அணியின் வரிசையில் முதல் வீரராக மைதானத்தில் நின்றார். ஆனால் அவருக்கு திடீரென இடுப்பு பகுதியில் ஏதோ பிரச்சனை உண்டாக, மைதானத்தில் இருந்த சக வீரர்களிடம் கூறிவிட்டு நேராக ஓய்வறைக்குச் சென்று விட்டார். களத்தில் இருந்த ஆர்சிபி வீரர்கள் அதிக நேரம் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்ததால் அவரால் நிற்க முடியவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : தோனி அடித்த 110 மீட்டர் சிக்ஸரால் வந்த வினை.. சிஎஸ்கே தோல்விக்கு காரணமான வினோதம்.. என்ன நடந்தது?

அதே சமயத்தில் திரும்பி செல்லும் பொழுது பெவிலியனில் எதிர்பட்ட ஆர்சிபி அணி ஊழியர்கள் மற்றும் வீரர்களிடம் கைகுலுக்கி விட்டு தோனி சென்றது குறிப்பிடத்தக்கது. நேற்று அவருக்கு அதிக நேரம் நிற்க முடியாத காரணத்தினால் அவர் சென்றார். மற்றபடி இதற்கு பின்னணியில் வேறு எந்த காரணங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.