27 வருட ஏக்கம்.. புதிய வரலாறு.. ஆஸியை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்.. திரில் போட்டியில் மாஸ் வெற்றி

0
526
Australia

வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுகிறது. இதில் முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

இந்த நிலையில் தொடரின் இறுதி மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. பரபரப்பான இந்த போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் அணியை ஆஸ்திரேலியாவை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரமான வெற்றியை பெற்று இருக்கிறது. மேலும் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்திய முதல் அணியாக வெஸ்ட் இண்டீஸ் வரலாற்றை பதிவு செய்திருக்கிறது.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டிஸ் அணி 311 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் கெவிம் ஹாட்ஜ் மற்றும் ஜோசுவா டி சில்வா இருவரும் அரைசதம் அடித்து அந்த அணியை காப்பாற்றி இருந்தார்கள்.

இதற்கு அடுத்து முதல் இன்னிங்ஸ் விளையாடிய ஆஸ்திரேலியா ஆச்சரியப்படுத்தும் விதமாக 9 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. காரணம் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் இரவு நேரத்தில் பந்துவீச்சிக்கு சாதகமான சூழ்நிலையை பயன்படுத்திக்கொள்ள இவ்வாறு செய்தது.

இதற்கு அடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 193 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு 216 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

இந்த இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணி 113 ரன்கள் வரையில் இரண்டு விக்கெட் மட்டுமே இழந்து அபாரமான முன்னிலையில் இருந்தது. இதற்கு அடுத்து மொத்தமாக கதையையே வெஸ்ட் இண்டீஸ் அணியின் புதிய வீரர் ஷாமார் ஜோசப் மாற்றிவிட்டார். மேற்கொண்டு 94 ரன்கள் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகளை இழந்தது.

ஆஸ்திரேலியா இழந்த இந்த எட்டு விக்கெட்டுகளில் ஏழு விக்கெட்டுகளை ஷாமார் ஜோசப் கைப்பற்றி ஆச்சரியப்படுத்தினார். 11.5 ஓவர் பந்து வீசிய அவர் 68 ரன்கள் விட்டுத்தந்து ஏழு விக்கெட் கைப்பற்றி ஆஸ்திரேலியா அணியை மிரட்டினார்.

ஒரு முனையில் துவக்க வீரராக வந்து கடும் போராட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மித் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 90 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார். இவருக்கு அடுத்தபடியாக கேமரூன் கிரீன் 42 ரன்கள் எடுத்தார். இறுதியாக ஆஸ்திரேலியா அணி 216 ரன்கள் இலக்குக்கு 27 ரன்கள் மட்டும் எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இதையும் படிங்க : “கில் போப்கிட்ட இருந்து இத எடுத்துக்கனும்.. 2 பேருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு” – மஞ்ச்ரேக்கர் அனலைஸ்

கடைசியாக வெஸ்ட் இண்டிஸ் அணி ஆஸ்திரேலிய மண்ணில் 27 வருடங்கள் கழித்து தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. நிச்சயமாக இந்த வெற்றி வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் புதிய வீரர்களை கொண்டு வரும் என்பதில் சந்தேகம் இல்லை.