தோனியின் ஓய்வை யோசிச்சா பைத்தியம் பிடிச்சிடும்.. அதுபற்றி தெரிந்த ஒரே ஆள் ஒருவர்தான் – சிஎஸ்கே பவுலிங் கோச் பேட்டி

0
662
Simons

நேற்று ஆர்சிபி அணிக்கு எதிராக தோல்வியடைந்து சிஎஸ்கே அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்தது. இந்த போட்டி மகேந்திர சிங் தோனிக்கு கடைசி போட்டியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அது சம்பந்தமாக எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. இந்த நிலையில் தோனி உடைய ஓய்வு எப்பொழுது என சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் எரிக் சிமன்ஸ் பேசியிருக்கிறார்.

கடந்த ஆண்டு சிஎஸ்கே அணி ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றது. எனவே தோனி வெற்றிகரமாக அம்பதி ராயுடு போல ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ரசிகர்களின் கோரிக்கைக்காக இன்னொரு ஆண்டு விளையாடுவேன் என்று தெரிவித்தார்.

- Advertisement -

மேலும் இதற்காக அவர் கால் முட்டியில் அறுவை சிகிச்சை செய்து மிகச் சிறப்பாக திரும்பி வந்தார். ஆனால் ஐபிஎல் தொடருக்கு முன்பாக அவருக்கு தசைக் கிழிவு காயம் ஏற்பட்டது. மேலும் இரண்டாவது விக்கெட் கீப்பர் கான்வே அணியில் இல்லை. இதன் காரணமாக அவர் தொடர்ந்து விளையாட வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. நேற்று தோல்வி அடைந்து விட்டதால், தோனி ஓய்வு பெறுவாரா? என்கின்ற விவாதம் சென்று கொண்டு இருக்கிறது.

இதுகுறித்து சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் எரிக் சிமன்ஸ் பேசும்பொழுது “தோனியின் எதிர்காலத்தைப் பற்றி யூகிக்க எவருக்கும் பைத்தியம் பிடிக்க வைத்து விடும். அவர் என்ன செய்யப் போகிறார் என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும். ஐபிஎல தொடர்களுக்கு முன்பாக பயிற்சியில் அவர் பந்தை அடிப்பதை நான் பார்த்திருக்கிறேன். பல ஆண்டுகளாக அவர் மிகச் சிறப்பாக விளையாடுகிறார். கிரிக்கெட் மற்றும் வாழ்க்கைப் புரிதலின் அடிப்படையில் அவர் ஒரு சிறந்த நபர்.

தோனியைப்பற்றிய பல சிறந்த நினைவுகள் இருக்கிறது. அவர் விளையாடும் நாக் உங்களை சிக்கலில் இருந்து விடுவிக்க கூடியது. அவர் பேட்டிங்கில் இருந்தால் நாம் வெற்றி குறித்து சந்தேகப்படத் தேவையில்லை. அவர் எல்லோருக்காகவும் போட்டியை வெல்வார். அவர் அணிக்குள் அளவிட முடியாத தன்னம்பிக்கையை கொண்டு வரக்கூடியவர்.

- Advertisement -

இதையும் படிங்க : ஆர்சிபி வீரர்களிடம் கை குலுக்காமல் திடீரென வெளியேறிய தோனி.. காரணம் என்ன.. களத்தில் என்ன நடந்தது?

அதே சமயத்தில் அவர் விளையாட்டுப் பற்றிய எளிமையான புரிதலை வைத்திருப்பவர். அதை அணியில் மற்ற வீரர்களுக்கும் அவர் கடத்துகிறார். இப்படி எளிமையாக விளையாட்டை புரிவதற்குதான் எல்லோரும் கடினப்படுகிறார்கள். ஆனால் அது தோனிக்கு இயல்பாக வாய்த்திருக்கிறது. தோனியை போல நீங்கள் விளையாடுவதுபற்றியது இது இல்லை. நீங்கள் விளையாட்டை எப்படி புரிந்து கொள்கிறீர்கள் என்பதில்தான் தோனி பிரம்மாண்டமானவர்” என்று கூறியிருக்கிறார்.