“இந்தியாவுக்கு எதிரா இந்த ஆஸி நட்சத்திர வீரர் விளையாட வாய்ப்பு ரொம்ப குறைவு!” – பயிற்சியாளர் வெளியிட்ட முக்கிய தகவல்!

0
262
Australia

ஒருநாள் கிரிக்கெட்டில் நடப்பு உலக சாம்பியன் இங்கிலாந்தும், கடந்த முறை உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு சென்ற நியூசிலாந்தும், 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையின் துவக்க போட்டியில் தற்போது குஜராத் அகமதாபாத் மைதானத்தில் விளையாடி வருகிறார்கள்.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியை 282 ரன்களுக்கு மிகச் சிறப்பாக பந்துவீசி நியூசிலாந்து மடக்கி இருக்கிறது. அதே சமயத்தில் முதல் 10 ஓவர்களுக்கு ஒரு விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்து அதிரடியான துவக்கத்தையும் பெற்றிருக்கிறது.

- Advertisement -

இந்த போட்டிக்கு ரசிகர்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருக்கிறது. எனவே நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்தியா விளையாடும் போட்டிக்குதான் மைதானம் முழுமையாக நிரம்பும் என்கின்ற நிலை இருக்க, இந்தியா விளையாடும் போட்டிக்கான எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.

இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அக்டோபர் எட்டாம் தேதி சந்தித்து விளையாட இருக்கிறது. தற்போது இரு அணி வீரர்களும் சென்னையில் முகாமிட்டு பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை எடுத்துக் கொண்டால் வேகப்பந்துவீச்சுக்கு மூன்று ஆல் ரவுண்டர்கள் மற்றும் சுழற் பந்துவீச்சுக்கு ஒரு ஆல் ரவுண்டர் என மொத்தம் நான்கு ஆல் ரவுண்டர்கள் விளையாடும் அணியிலேயே இடம் பிடிக்கும் அளவுக்கு வலிமையாக இருக்கிறார்கள்.

- Advertisement -

அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் இரண்டு பயிற்சி போட்டிகளிலும் விளையாடவில்லை. அதேபோல் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் கடைசி இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை.

இதுகுறித்து அந்த அணியின் பயிற்சியாளர் கூறும் பொழுது ” அவர் நிச்சயமாக எங்களுடைய திட்டத்தில் இருந்து விலக்கப்படவில்லை. ஆனால் பயிற்சி போட்டிகளில் அவரை களம் இறக்கி நாங்கள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.

இன்று எங்களுக்கு ஒரு முக்கிய பயிற்சி அமர்வு இருக்கிறது. மேலும் மற்றொரு பயிற்சி அமர்வு இருக்கிறது. அதில் அவர் நிச்சயம் கலந்து கொள்வார். அதிலிருந்து அவர் போட்டியில் விளையாடும் அளவுக்கு தகுதியாக இருக்கிறாரா? என்று பார்க்கப்படும்.

அடுத்த இரண்டு நாட்கள் மிக முக்கியமானது. இந்த பயிற்சி நாட்களில் அவரை பரிசோதிப்பதன் மூலம் அவர் போட்டிக்கு கிடைப்பாரா? என்று தெரிய வரும்.

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் மிகவும் பிசியாக இருந்தது. ஒரு நாள் கிரிக்கெட் போட்டி விளையாடுவதற்கு அவ்வளவு எளிதானது கிடையாது. நாங்கள் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் ஒரே வாரத்தில் மூன்று ஒருநாள் போட்டிகள் விளையாடி இருந்தோம். இது உடல் ரீதியாக நிறைய வேலை செய்கிறது!” என்று கூறி இருக்கிறார்!