இதெல்லாம் ஒரு தேர்வுக் குழுவா? இவங்களுக்கு ஏதாவது கொள்கை இருக்கா? – அகர்கரை விளாசிய கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்!

0
4120
Srikanth

இந்த மாதம் ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்கி பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கும் ஆசியக் கோப்பைக்கு இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு அணியை இறுதி செய்வதற்கு ஆசியக் கோப்பைக்கு அறிவிக்கப்படும் அணி மிக முக்கியமானது. எனவே 15 பேர் கொண்ட அணிக்கு பதிலாக 17 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டு இருந்தது.

- Advertisement -

இந்த அணியில் காயத்தில் இருந்து திரும்பி வந்த கே எல் ராகுல் சேர்க்கப்பட்டு இருந்தார். அதே சமயத்தில் அவருக்கு காயம் குணமாகிவிட்டாலும், சிறிய அளவில் நிக்கில் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் முதல் இரண்டு போட்டிகளை தவற விடுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக 18-வது வீரராக கே எல் ராகுலுக்கு பேக்அப் வீரராக சஞ்சு சாம்சன் அணியுடன் பயணிப்பார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு இந்திய முன்னாள் வீரரும் இந்தியத் தேர்வுக்குழுவின் முன்னாள் தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது கண்டனத்தை கடுமையாக பதிவு செய்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“கே.எல்.ராகுலுக்கு நிக்கில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படி இருந்தால் முதலில் அவரை அணியிலே சேர்க்காதீர்கள். ஒரு வீரர் முழுவதுமாக உடற்தகுதி பெறாமல் இருந்தால், தேர்வு செய்யும் பொழுது அவர் கிடைக்கமாட்டார் என்றால் நாங்கள் அவரை தேர்வு செய்ய மாட்டோம். இதுதான் அன்று எங்கள் தேர்வு குழுவின் கொள்கையாக இருந்தது. நீங்கள் அவர் உடற்தகுதி பெற்றால் உலகக் கோப்பை கூட எடுத்துக் கொள்ளுங்கள். அது பிரச்சனை கிடையாது. இப்படிப்பட்ட ஒரு வீரருக்கு சஞ்சு சாம்சனை மாற்றாக கூட்டிக்கொண்டு போகிறார்கள். இது என்ன மாதிரி என்று புரியவில்லை!

- Advertisement -

நீங்கள் ஆசிய கோப்பையில் விளையாடுகிறீர்கள். இதுவும் முதன்மையான தொடர்தான். இரண்டு முறையாக தேர்வு பெற முடியாமல் ஆசியக் கோப்பையில் போயிருக்கிறது. நீங்கள் தற்போது இதில் தன் இறுதிப் போட்டிக்கு முன்னேறி சிறப்பாக செயல்படுவது முக்கியம். நீங்கள் உங்களுக்கென்று ஏதாவது தேர்வு கொள்கை வைத்திருக்க வேண்டும். நான் இதில் எந்த கிரேடிட்டையும் எடுத்துக் கொள்ள முயற்சிக்கவில்லை. நாங்கள் எப்படி செயல்பட்டோம் என்று மட்டும் சொல்கிறேன்.

ஒரு டெஸ்ட் போட்டியின் போது எங்களுக்கு இப்படியான ஒரு பிரச்சனை ஏற்பட்டது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அந்த டெஸ்ட் போட்டியின் போது, தான் சரியான நேரத்தில் உடற்தகுதி பெற்றால் விளையாடுவதாக லக்ஷ்மன் எங்களிடம் கூறினார். அதனால் நாங்களும் அவர் உடற்தகுதி இல்லாத போது தேர்ந்தெடுத்தோம். அவரும் உடற்தகுதியை போட்டியின் போது எட்டவில்லை, அவருக்கு மாற்றாக இருந்த ரோஹித் சர்மாவும் கால்பந்து விளையாடி காயமடைந்தார். அதனால் விருதிமான் சகா அறிமுகமாக வேண்டியதாக இருந்தது. அன்றோடு நாங்கள் உடல் தகுதி இருந்தால் மட்டுமே தேர்ந்தெடுத்தோம்!” என்று கூறியிருக்கிறார்!