“பாகிஸ்தானில் பாபர் அசாமை விட சிறந்த பேட்ஸ்மேன் இந்த 24 வயது வீரர்தான்!” – ஆஸி சைமன் கேடிச் பேச்சு!

0
936
Babar

தற்பொழுது பாகிஸ்தான அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவிற்குச் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது.

இந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று அதிவேக ஆடுகளத்தை கொண்ட பெர்த் மைதானத்தில் தொடங்கியது.

- Advertisement -

இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா பேட் கம்மின்ஸ் தமது அணி முதலில் பேட்டிங் செய்யும் என அறிவித்தார். ஆஸ்திரேலியா அணியில் பெரிய மாற்றங்கள் எதுவும் கிடையாது. பாகிஸ்தான் அணியில் இரண்டு இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் அறிமுகமானார்கள்.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி தனது கடைசி டெஸ்ட் தொடரில் விளையாடும் டேவிட் வார்னரின் அதிரடியான பெரிய சதத்தின் உதவியுடன் 487 ரன்கள் குவித்தது. பாகிஸ்தானின் அறிமுக வேகப்பந்துவீச்சாளர் அமீர் ஜமீல் 6 விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி தற்பொழுது இரண்டு விக்கெட் இழப்புக்கு இரண்டாம் நாள் முடிவின்போது 132 ரன்கள் எடுத்திருக்கிறது. சிறந்த தடுப்பாட்டம் விளையாடி அப்துல்லா ஷபிக் 121 பந்துகளில் ஆறு பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் 24 வயதான அப்துல்லா ஷபிக் பற்றி பேசிய ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் சைமன் காடிச் கூறும்பொழுது “அவர் மிகவும் திறமையான வீரர். அவரது டெஸ்ட் வாழ்க்கையில் ஒரு நல்ல தொடக்கத்தை பெற்றிருக்கிறார். நான் அவரிடம் பெரிதும் விரும்புவது சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவர் காட்டும் ஆக்ரோசத்தைத்தான்.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தானில் வைத்து அவர் விளையாடிய விதத்தை நாம் பார்த்தோம். நாதன் லயன் சுழல் பந்துவீச்சுக்கு எதிராக அவர் சிறப்பாக விளையாடினார். நேராக தலைக்கு மேல் தூக்கி அடித்தார். இன்றும் அவர் அதையே செய்தார். என்னைப் பொறுத்தவரை அவர் பாபர் அசாமை விட சிறந்த வீரராக வரப் போகிறார்!” என்று கூறியிருக்கிறார்!

அப்துல்லா ஷபிக் இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில், 26 இன்னிங்ஸ்களில், 50 ரன் ஆவரேஜில், நான்கு அரைசதம் மற்றும் நான்கு சதங்கள் உடன்,1220 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் அதிகபட்சமாக 201 ரன்கள் என ஒரு இரட்டை சதத்தை பதிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.